கோவை வந்த பிரதமர் மோடி – எடப்பாடி பழனிசாமி உற்சாக வரவேற்பு
EPS Welcomes PM Modi : கோவை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். கோவை வருகை தந்துள்ள பிரதமருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் ஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்
கோயம்புத்தூர், நவம்பர் 19: கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நவம்பர் 14, 2025 அன்று கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi), விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) உற்சாக வரவேற்பு அளித்தார். கோவை வருகை தந்துள்ள பிரதமருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் ஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக சார்பில் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். இதனையடுத்து பிரதமர் மோடி கார் மூலம் வேளாண்மை உச்சி மாநாடு நடைபெறும் கொடிசியா மைதானத்துக்கு சென்றார். வழியில் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை வந்த பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக வரவேற்பு
கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றவிருக்கிறார். இந்த மாநாடு நவம்பர் 19, 2025 அன்று தொடங்கி மூன்று நாட்கள் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. மேலும் கோயம்புத்தூரில் பல்வேறு திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் 94.74% SIR படிவங்கள் விநியோகம்.. தேர்தல் ஆணையம் தகவல்




இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவரை அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வரவேற்றனர். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரும் வரவேற்றனர்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடி
கோயம்புத்தூர் கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண்மை மாநாட்டை முன்னிட்டு, சுமார் 300 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வேளாண்மை குறித்து விவசாயிகள் பயனடையும் வகையில், பல்வேறு கருத்தரங்கங்களும் நடைபெறும். இந்த வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பின், பிரதமர் நரேந்திர மோடி பிஎம் கிசான் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18,000 கோடி உதவித்தொகையை வழங்குகிறார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தை சேர்ந்த 21,80,24 விவசாயிகள் பயனடையவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : “ஆட்சியில் பங்கு வேண்டும்.. ஆனால் வேண்டாம்”… என்ன சொல்கிறது விசிக?
மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு சிறப்பு விருதுகளை வழங்குகிறார். அதேபோல் தென்னிந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் 50 பேருடன், இயற்கை வேளாண்மையில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் புதிய வழிமுறைகள் ஆகியவை குறித்தும் கலந்துரையாடவிருப்பதாக கூறப்படுகிறது.