இறந்த 45 தெருநாய்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி.. கோயம்புத்தூரில் அதிர்ச்சி!

25 Stray Dogs Test Positive for Rabies | கோயம்புத்தூரில் கண்காணிப்பில் வைக்கப்பட்ட 45 தெரு நாய்கள் உயிரிழந்த நிலையில், அவற்றின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறந்த 45 தெருநாய்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி.. கோயம்புத்தூரில் அதிர்ச்சி!

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Sep 2025 10:26 AM

 IST

கோயம்புத்தூர், செப்டம்பர் 26 : கோயம்புத்தூரில் (Coimbatore) இறந்துப்போன 45 தெரு நாய்களில் 25 தெருநாய்களுக்கு ரேபிஸ் (Rabies) தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 45 தெருநாய்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், அவை உயிரிழந்துள்ளன. அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூரில் 25 தெருநாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோயம்புத்தூரில் இறந்துப்போன 25 தெருநாய்களுக்கு ரேபிஸ்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளன. இந்த தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், ரேபிஸ் நோய் தொற்றை ஒழிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சில பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு உடல்நல பிரச்னைகளுடன் கூடிய 49 நாய்கள் கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாய்களில் 4 நாய்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டன.

இதையும் படிங்க : பள்ளியில் அருகே அமர்வதில் தகராறு… 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு – திருநெல்வேலியில் பரபரப்பு

முகாம்களில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நாய்கள்

இந்த நிலையில் மீதமிருந்த 45 தெருநாய்கள் முகாம்களில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. அப்போது அந்த 45 தெருநாய்களும் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில் அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றுக்கு ரேபிஸ் நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய எல்.எப்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மற்றொரு சரிப்பார்ப்புக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வில் கோயம்புத்தூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 45 மாதிரிகளில் 25 தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாய், மூக்கில் வடிந்த ரத்தம்.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. சென்னையில் ஷாக்

பெங்கள்ரூருவில் இருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவுகளின் மூலம் கோயம்புத்தூரில் உள்ள தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக ரேபிஸ் நோய் தொற்று பாதிப்பை தடுக்கவும், ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ள தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 45 தெரு நாய்களின் மாதிரிகளில் 25 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கோயம்புத்தூர் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.