வாய், மூக்கில் வடிந்த ரத்தம்.. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. சென்னையில் ஷாக்
Chennai Crime News : சென்னையில் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, கடற்கரையில் சிக்கன் பிரைடு ரைஸ், பொறித்த மீன் உள்ளிட்டவற்றை சிறுமி சாப்பிட்டு, உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, செப்டம்பர் 25 : சென்னையில் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்நாள் அன்று சிறுமி கடற்கரையில் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்டுள்ளார். இதன்பின்பு, சிறுமிக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்துள்ளது. இதனை அடுத்து, சிறுமி உயிரிழந்துள்ளார். இன்றைய காலத்தில் நாம் சாப்பிடும் உணவு பெரிதும் முக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது முக்கியம். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படக்கூடும். அந்த வகையில், சென்னையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, சென்னையில் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன்.
இவரது மனைவி பதுமேகலா. இந்த தம்பதிக்கு சஞ்சனா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக வடபழனியில் வாடகை வீடு எடுத்து மனைவியுன் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகள் சஞ்சனா ஸ்ரீ ஈரோட்டில் உறவினர் வீட்டில் இருந்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள் வந்தது. இதனால், ஈரோட்டில் இருந்து பெற்றோரை பார்ப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.
Also Read : வரதட்சணை கொடுமை புகார்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை




சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட சிறுமி பலி
சென்னை வந்த அவர், வடபழனியில் இருக்கும் பெற்றோருடன் தங்கினார். மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மகேந்திரன் மற்றும் பதுமேகலா சிறுமியை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட மீன், சிக்கன் பிரைடு ரைஸ் உள்ளிட்டவற்றை சிறுமி சாப்பிட்டுள்ளார். அடுத்த நாள் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து, சிறுமி சஞ்சனாவுக்கு மருந்து கொடுத்துள்ளார்.
இருப்பினும் சிறுமிக்கு காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது. மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இருந்த நிலையில், சிறுமியின் வாய், மூக்கில் ரத்தம் வடிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
Also Read : சபரிமலைக்கு போறீங்களா? வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.. உடனே புக் பண்ணுங்க!
இதுகுறித்து உடனே வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனைக்கு பிறகே சிறுமியின் உயிரிழப்புக்கான முழு காரணம் தெரியவரும்.