ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
BSP Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 24 : பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், தற்போது சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கை 6 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வெளியே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உணவு டெலிவிரி ஊழியர்களின் உடை அணிந்த வந்த கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதோடு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டதில், கொலைக்கான காரணம் முன்விரோதம் மற்றும் 2023ஆம் ஆண்டு ‘ஆர்காட்’ சுரேஷ் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட முன் விரோதம் என்பது தெரியவந்தது. எனவே, சுரேஷின் மனைவி, சகோதரர், மைத்துனர், பிற உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் உட்பட 30 பேர் மீது போலீசார் 7,087 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
Also Read : ’இனி கூட்டணிக்கு வாய்ப்பில்லை’ டிடிவி தினகரன் திட்டவட்டம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்
இதற்கிடையில், இந்த வழக்கை செம்பியம் காவல்துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என்று கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர், ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கே. இம்மானுவேல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. பல கட்ட விசாரணை நடந்து முடிந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முக்கிய உத்தரவை 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று பிறப்பித்தார்.
Also Read : பட்டப்பகலில் அதிர்ச்சி.. மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்.. வேலூரில் சம்பவம்
அதன்படி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு மாதத்தில், முதல் கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவும், செம்பியம் காவல் நிலைய விசாரணை அதிகாரி தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசியல் மற்றும் மீடியா தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தவும், உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஆவணங்களை வழங்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.