விஜயநகர காலத்து பொக்கிஷம் பறிமுதல்…4 பேரை தட்டி தூக்கிய போலீசார்…சிலை கடத்தல் பிரிவு அதிரடி நடவடிக்கை!

Metal Statues Seized : தஞ்சாவூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து விஜயநகர காலத்தை சேர்ந்த 2 உலோக சிலைகளை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதில், தொடர்புடையதாக 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விஜயநகர காலத்து பொக்கிஷம் பறிமுதல்...4 பேரை தட்டி தூக்கிய போலீசார்...சிலை கடத்தல் பிரிவு அதிரடி நடவடிக்கை!

தஞ்சாவூரில் விஜயநகர காலத்த சிலைகள் பறிமுதல்

Published: 

12 Feb 2026 07:57 AM

 IST

தஞ்சாவூர் மாவட்டம், வலையப்பட்டி மைதானம் அருகே தஞ்சாவூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜி. பாலமுருகன் தலைமையிலான குழு மற்றும் தஞ்சாவூர் சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி உதவி ஆய்வாளர் தண்டாயுதபாணி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாகனத்தை சோதனை செய்தனர். இதில், அந்த காரில் சாக்கு பைகளில் 2 உலோக சிலைகள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த காரில் இருந்த இருவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சிலை கடத்தலில் 4 பேர் கைது

இந்த விசாரணையில், அவர்கள் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் ( 41 வயது), திருவாரூர், விக்யாயபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (41 வயது) என்பதும் இவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு பெரிய தொகைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. மேலும், அவர்கள் அளித்த தகவலின் பேரில், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலபாண்டியைச் சேர்ந்த முகிலன் (36 வயது), மற்றும் இடையாறு சங்கேந்தியே சேர்ந்த ஜான்சன் ( 41 வயது) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க: திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: காளை முட்டி புது மாப்பிள்ளை உயிரிழப்பு – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

விஜயநகர காலத்து உலோக சிலைகள் பறிமுதல்

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் ஒன்று சுதர்சனம் ( விஷ்ணு சிலை), 77.300 கிலோ எடை, 90 சென்டி மீட்டர் உயரமும், 48 சென்ட் மீட்டர் அகலமும் இருந்தது. இந்த சிலையின் முன்பக்கம் 2 கை விரல்களும் சேதம் அடைந்திருந்தன. மேலும், தலைக்கு மேலே உள்ள நெருப்பு சுடர் பகுதியும் வெட்டப்பட்டிருந்தது. மற்றொரு சிலை 35.450 கிலோ எடையும், 73 சென்டி மீட்டர் உயரமும், 31 சென்டி மீட்டர் அகலமும் உடைய தேவி சிலை ஆகும். இந்த சிலைகள் விஜயநகர காலத்தைச் சேர்ந்ததாகும். சிலைகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் தொடர்புடையோருக்கு வலை வீச்சு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தண்டாயுதபாணி அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் காவேரியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கைது செய்யப்பட்ட மணிகண்டன், ராமச்சந்திரன், முகிலன் மற்றும் ஜான்சன் ஆகியோர் தஞ்சாவூர் கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கும்பகோணம் துணை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன் பிரதீப் ஜான் ரிப்போர்ட்..

ஐரோப்பாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: என்னென்ன தெரியுமா?
இனி ரூ.25,000 முதல் உடனடி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் - எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு
மது இல்லாத திருமணங்களுக்கு ரூ.51,000 பரிசு - உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
கால்வாயில் விழுந்த கார்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..