IND vs PAK Head to Head: டி20 உலகக் கோப்பையில் 9வது முறை மோதும் IND – PAK.. யார் அதிக முறை வெற்றிபெற்று ஆதிக்கம்?
India vs Pakistan T20 Head to Head: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையின் கொழும்பில் நடைபெறும். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும்.

இந்தியா - பாகிஸ்தான்
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா – பாகிஸ்தான் (India vs Pakistan) போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பு ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இது வெறும் போட்டி மட்டுமல்ல, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான தேசப்பக்தியாகவும் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பைகளை கருத்தில் கொண்டால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியே முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஹெட் டூ ஹெட் விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
ஆதிக்கம் செலுத்தும் இந்தியா:
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 8 போட்டிகளில் இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் கடந்த 2021ம் ஆண்டு துபாயில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஒரு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
2007 முதல் 2024 வரையிலான இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை முடிவுகள்:
- 2007 (டர்பன்) – இந்தியா பவுல் அவுட் முறையில் வென்றது.
- 2007 பைனல் (ஜோகன்னஸ்பர்க்) – இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2012 (கொழும்பு) – இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2014 (மிர்பூர்) – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2016 (ஈடன் கார்டன்ஸ்) – இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2021 (துபாய்) – பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2022 (மெல்போர்ன்) – இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2024 (நியூயார்க்) – இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரே ஒருமுறை இறுதிப்போட்டியில் மோதல்:
2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் 2 முறை மோதின. முதலில் நடந்த லீக் ஸ்டேஜ் போட்டியில் இந்திய அணி பவுல் அவுட் முறையில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, 2007 டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் ஒரு முறை மோதியது. இதில், எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி, மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தி முதல் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
ALSO READ: முடிவுக்கு வந்த பஞ்சாயத்து.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி உறுதி.. முழு விவரம்!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையின் கொழும்பில் நடைபெறும். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும். டாஸ் மாலை 6:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை காண விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தமிழில் காணலாம்.