AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், ஏப்ரல் 5, மற்றும் 6, 2026 இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Apr 2026 17:25 PM IST

சென்னை, ஏப்ரல் 5 : தமிழ்நாட்டில் கடந்த மார்ச், 2026 முதலே பல இடங்களில் வெயில்வாட்டி வந்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை நிலவியது.  இந்த நிலையில் மக்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து தணிக்கும் விதமாக ஏப்ரல் 4, 2026 முதல் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் விருதுநகர் சில மாவட்டங்களில் ஏப்ரல் 5. 2026 மற்றும் ஏப்ரல் 6, 2026 ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதத்திருக்கிறது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் இந்த நிலையில் தற்போது சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் ஏப்ரல் 5, மற்றும் 6, 2026 இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய சவால்: 3 மொழி கட்டாயம்..!

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்குதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆந்திர மாநிலம் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா வரை சுமார் 900 மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்ககளிலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிக்க : சென்னையில் உட்பட வட தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.. இடி, மின்னலுடன் மழைக்கும் வாய்ப்பு.. வானிலை அப்டேட்!!

மேலும், ஏப்ரல் 7, 2026 அன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 8ஆ, 2026 அன்று  மாநிலத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  மேலும் ஏப்ரல் 9 மற்றும் 10, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 11, 2026 அன்று மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 6, 2026 மற்றும் ஏப்ரல் 7, 2026 ஆகிய நாட்களில்  வழக்கத்தை விட சுமார் 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு அதிக வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்ததியுள்ளது.

Follow Us