AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது.. வெயிலுக்கு பிரேக்.. வானிலை அப்டேட்!!

Weather Update: ஏப்ரல் 07 ஆம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என கூறியுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது.. வெயிலுக்கு பிரேக்.. வானிலை அப்டேட்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 05 Apr 2026 06:33 AM IST

Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. தமிழகத்தில் நேற்றைய தினம் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

இதையும் படிக்க: “விஜய் என் தம்பி.. அவருக்கு என் வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் உண்டு”.. குஷ்பு நெகிழ்ச்சி!!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று ஏப்ரல் 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

ஏப்ரல் 06 தென்தமிழகதில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 07 தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 08, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 09 மற்றும் ஏப்ரல் 10 ஆம் தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

ஏப்ரல் 07 ஆம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேசமயம், அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடானது,: இன்று முதல் ஏப்ரல் 07 ஆம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் தென்தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிக்க: ‘திராவிட மாடல்’ என்பது ஒரு ஏமாற்று வேலை.. தோல்வி பயத்தில் முதல்வர்.. டிடிவி தினரகன் சாடல்!!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us