பயணிகள் கவனித்திற்கு… மின்சார ரயில் சேவையில் தற்காலிகமாக மாற்றம்…
Chennai Suburban Railway: சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டன. பணிகள் திட்டத்திற்கு முன்பே முடிக்கப்பட்டதால் 2026 ஏப்ரல் 03 இன்று முதல் மீண்டும் பழைய நடைமேடைகளில் சேவை தொடங்கியது. கோடை காலத்தில் பயணிகளின் சிரமத்தைக் குறைத்த ரெயில்வே ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது
சென்னை எழும்பூரில் மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக மாற்றப்பட்டது. மறுசீரமைப்பு பணிகள் காரணமாக நடைமேடை மாற்றம் செய்யப்பட்டது. ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர். பணிகள் திட்டத்திற்கு முன்பே முடிக்கப்பட்டது. இன்று முதல் மீண்டும் பழைய நடைமேடைகளில் சேவை தொடங்கியது. வார நாட்களில் மொத்தம் 212 ரெயில் சேவைகள் இயக்கம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் 190 சேவைகள் இயக்கப்படுகின்றன. குறித்த காலத்திற்கு முன்பே பணிகளை முடித்து, கோடை காலத்தில் பயணிகளின் சிரமத்தைக் குறைத்த ரெயில்வே ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது
மறுசீரமைப்பு காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள்
சென்னை, சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரெயில் சேவை. மின்சார ரெயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதன்படி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10 மற்றும் 11 வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்ததால், நடைமேடை 10, 11 வழியாக இயக்கப்பட்ட மின்சார ரெயில் சேவை, 5, 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டன. இதுதவிர ரெயில் சேவையும் கணிசமாக குறைக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
பணிகள் முடிவுக்கு முன் சேவை தொடக்கம்
மேலும் மறுசீரமைப்பு முடிந்ததும் வழக்கமான ரெயில் சேவை ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கும் என்று தென்னக ரெயில் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமேடை 10,11 வழியாக மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பணிகளும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னரே வெற்றிகரமாக முடிக்கப்பட்டதால், இந்த தடை முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டு, புறநகர் ரெயில் சேவைகள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கி உள்ளன. இதனால் அதில் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read: சிறையிலிருந்தே தேர்தல் களம் காணும் ஹரி நாடார்.. ஆலங்குளத்தில் மீண்டும் சவால்
பழைய அட்டவணை மீண்டும் அமலுக்கு
இதனிடையே கடந்த பிப்ரவரி 20-ந்தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வழக்கமான வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வார நாட்களில் சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு இடையே 106 ரெயில் சேவைகளும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டு தாம்பரம் – கடற்கரை இடையே 106 ரெயில் சேவைகளும் என இரு மார்க்கமாகவும் மொத்தம் 212 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை சேவைகள் விவரம் மற்றும் பாராட்டு
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 93 சேவைகளும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டு – தாம்பரம் – கடற்கரை இடையே 97 சேவைகளும் என மொத்தம் 190 ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. குறித்த காலத்திற்கு முன்பே பணிகளை முடித்து, கோடை காலத்தில் பயணிகளின் சிரமத்தைக் குறைத்த ரெயில்வே ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.