AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன்.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்..

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். அதேபோல், மொடக்குறிச்சி தொகுதியில் கிருத்திகா சிவகுமார், கோவை வடக்கு தொகுதியில் வானதி ஸ்ரீநிவாசன், அறந்தாங்கி தொகுதியில் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.

மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன்.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 03 Apr 2026 14:46 PM IST

சென்னை, ஏப்ரல் 3, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். அதேபோல், மொடக்குறிச்சி தொகுதியில் கிருத்திகா சிவகுமார், கோவை வடக்கு தொகுதியில் வானதி ஸ்ரீநிவாசன், அறந்தாங்கி தொகுதியில் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். இந்த பட்டியலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள சூழலில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில், பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல்… தேசிய கட்சிகள் 8 தொகுதியில் நேரடி போட்டி… மக்கள் ஆதரவு யாருக்கு!

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை:

குறிப்பாக, இந்த சட்டமன்றத் தேர்தலில் யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. அதே சமயம், காங்கிரஸில் இருந்து வெற்றி பெற்ற விஜயதரணி, முதல் முறையாக பாஜக தரப்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பரபரக்கும் தேர்தல் களம்: பாஜக தலைமையிடம் இருந்து அண்ணாமலைக்கு பறந்த அழைப்பு… முழு விவரம் உள்ள!

பாஜக வேட்பாளர் பட்டியல்:

Follow Us