தமிழக சட்டமன்ற தேர்தல்… தேசிய கட்சிகள் 8 தொகுதியில் நேரடி போட்டி… மக்கள் ஆதரவு யாருக்கு!
National Parties Direct Contest: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கும் வகிக்கும் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதே போல, அதிமுக கூட்டணியில் தேசிய கட்சியான பாஜக இடம் பெற்றுள்ளது. இதில், திமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சிகளுக்கு 38 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு களம் காண உள்ளது. இதேபோல, அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் தேசிய கட்சி சின்னமாக தாமரை முன்னிலையில் உள்ளது.
தேசிய கட்சிகள் 8 தொகுதிகளில் நேரடி போட்டி
அதே வேளையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், வெறும் 8 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. இதில், விளவங்கோடு, அறந்தாங்கி, குளச்சல், உதகை, கிள்ளியூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் சின்னங்கள் களம் இறங்குகின்றன. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
மேலும் படிக்க: P. Geetha Jeevan Tamil Nadu Election: திமுகவில் ஒரே பெண் அமைச்சர்… தூத்துக்குடி தொகுதியை தக்க வைப்பாரா கீதா ஜீவன்!




காங்கிரஸ்-பாஜகவுக்கு தலா 5 தனி தொகுதிகள்
இதே போல, கந்தர்வகோட்டை மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக போட்டியிடுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் பல பரீட்சையில் ஈடுபட உள்ளனர். இதில், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 5 தனி தொகுதிகளும், அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 5 தனி தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு – வரவேற்பு
ஆனால், தேசிய கட்சிகளான பாரதீய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தனி தொகுதியில் நேரடி போட்டி ஏற்படாமல் உள்ளது. இதில், கந்தர்வகோட்டை தனி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக களம் இறங்கும் தேசிய கட்சிகளில் எந்த கட்சிக்கு மக்கள் பெருவாரியான வரவேற்பை அளித்துள்ளார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்கொணரும்.
மேலும் படிக்க: விஜய்க்கு வந்த புதிய சிக்கல்… பெரம்பூரில் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு? என்ன காரணம்!