T20 World Cup Final: இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும்.. தற்போதையை அகமதாபாத் பிட்ச் நிலைமை என்ன?

T20 World Cup 2026 IND vs NZ Final: அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்று அதிக ஸ்கோர்கள் கொண்ட போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இது சிவப்பு களிமண் ஆடுகளம் என்பதாலும், சிறிது புல் உள்ளது என்பதாலும் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறிது உதவியை பெற்று தரும்.

T20 World Cup Final: இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும்.. தற்போதையை அகமதாபாத் பிட்ச் நிலைமை என்ன?

அகமதாபாத் பிட்ச்

Published: 

08 Mar 2026 18:38 PM

 IST

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இன்றுடன் அதாவது 2026 மார்ச் 8ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் இறுதிப் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி (Indian Cricket Team) தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. முன்னதாக, 2007ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது. பின்னர், 2024ம் ஆண்டு ரோஹித் சர்மா இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுத்தார். இப்போது, ​​சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும் கோப்பையை தூக்க முயற்சிக்கும். இதற்கிடையில், நியூசிலாந்து தனது முதல் டி20 உலகக் கோப்பை பட்டத்தை நோக்கிச் செல்லும்.

ALSO READ: 4வது முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா.. இதுவரை இந்திய அணி சாதித்தது என்ன?

4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி:

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 4வது முறையாகவும், நியூசிலாந்து 2வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்பு இந்தியா இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு முறை இலங்கையிடம் தோற்றது. மறுபுறம், நியூசிலாந்து ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடி அதிலும் தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இந்த 2 அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதை காண ஆவலுடன் இருநாட்டு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பிட்ச் அறிக்கை:

அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்று அதிக ஸ்கோர்கள் கொண்ட போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இது சிவப்பு களிமண் ஆடுகளம் என்பதாலும், சிறிது புல் உள்ளது என்பதாலும் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறிது உதவியை பெற்று தரும். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்திற்கு எதிரான தொடர் தோல்விகளை முறியடிக்க இந்தியாவுக்கு இதை விட சிறந்த வாய்ப்பு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்யலாம்.

போட்டியை எங்கு காணலாம்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக தொலைக்காட்சியில் காணலாம். இந்த போட்டி ஜியோஸ்டார் ஆப் வழியாக மொபைல் மற்றும் லேப்டாப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என உங்களுக்கு ஏற்ற வகையில் மொழி தேர்வை மேற்கொண்டு போட்டியை ரசிக்கலாம்.

ALSO READ: பைனலில் படையெடுக்கும் சாதனைகள்.. படைப்பார்களா 3 இந்திய வீரர்கள்?

கணிக்கப்பட்ட இந்திய அணியின் விவரம்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷிவம் துபே, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.

கணிக்கப்பட்ட நியூசிலாந்து அணியின் விவரம்:

டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திர, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கோல் மெக்கோன்சி, மேட் ஹென்றி மற்றும் லாக்கி பெர்குசன்.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு