Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2027 Cricket World Cup: 2027ல் ஒருநாள் உலகக் கோப்பை! கோலி, ரோஹித் விளையாட மாட்டார்களா? சுனில் கவாஸ்கர் கருத்து!

Sunil Gavaskar prediction: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சுனில் கவாஸ்கர், வயது காரணமாக அவர்கள் விளையாடாமல் போகலாம் எனக் கணித்துள்ளார். இருப்பினும், அவர்களின் சிறப்பான ஆட்டம் தொடர்ந்தால், தேர்வுக்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

2027 Cricket World Cup: 2027ல் ஒருநாள் உலகக் கோப்பை! கோலி, ரோஹித் விளையாட மாட்டார்களா? சுனில் கவாஸ்கர் கருத்து!
ரோஹித் சர்மா - விராட் கோலிImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 13 May 2025 15:31 PM

இந்திய கிரிக்கெட் அணியின் 2 ஜாம்பவான்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இந்திய ரசிகர்களை ஏமாற்றினார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்த இரண்டு வீரர்களும் டி20யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து, தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெற்றதால், ரோஹித் மற்றும் கோலி இனி சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். இந்தநிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வருகின்ற 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் (2027 Cricket World Cup) விளையாடாமல் போகலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு:

கடந்த 2025 மே 7 ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதற்கு 5 நாட்களுக்குப் பிறகு, விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள். அதன் அடிப்படையில், இந்த இரண்டு நட்சத்திர வீரர்களும் வருகின்ற 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இது கடினமானது என்று தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் பேட்டி:

சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் டுடேவுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இடம்பெற மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் என்றாலும், வயது காரணமாக அவர்கள் விளையாடாமல் போகலாம். அப்போது, ரோஹித்துக்கு 40 வயது இருக்கும், கோலிக்கு 38 வயது இருக்கும்.

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவும், விராட் கோலி அற்புதமாக செயல்படுகிறார்கள். ஆனாலும், அவர்களின் எதிர்காலத்தை தேர்வாளர்கள்தான் தீர்மானிப்பார்கள். ரோஹித் மற்றும் கோலி அணியில் இருப்பதன் மூலம் ஏதாவது செய்ய முடியும் என்று தேர்வாளர்கள் நினைத்தால், அவர்கள் மட்டுமே அவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இருப்பினும், என்னை பொறுத்தவரை, அவர்கள் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம், ஒரு வருடத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும். ஒருவேளை அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கி சதம் அடித்தால், கடவுளாலும் கூட ரோஹித் மற்றும் கோலியை வெளியே வைத்திருக்க முடியாது.” என்றார்.

விராட் கோலி சர்வதேச ஒருநாள் வாழ்க்கை:

இந்திய அணிக்காக விராட் கோலி இதுவரை 302 ஒருநாள் போட்டிகளில் 290 இன்னிங்ஸ்களில் 14181 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் வடிவத்தில் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள் ஆகும். மேலும், ஒருநாள் வடிவத்தில் விராட் கோலி 51 சதங்களையும், 74 அரைசதங்களையும் பதிவு செய்துள்ளார்.

ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் வாழ்க்கை:

இந்திய அணிக்காக ரோஹித் சர்மா இதுவரை 273 போட்டிகளில் 265 இன்னிங்ஸ்களில் 11168 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்களும் 58 அரைசதங்களும் அடங்கும். ஒருநாள் வடிவத்தில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 264 ரன்கள் ஆகும்.

ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!...
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!...
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்...
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி...
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!...
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்...
மழையில் நனைந்த பாதுகாவலருக்கு குடையாக மாறிய யானைகள்!
மழையில் நனைந்த பாதுகாவலருக்கு குடையாக மாறிய யானைகள்!...
ஐபிஎல் விளையாடுவது வீரர்களின் முடிவு - கிரிக்கெட் ஆஸ்திரேலியா
ஐபிஎல் விளையாடுவது வீரர்களின் முடிவு - கிரிக்கெட் ஆஸ்திரேலியா...
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் போட்டோஸ்!
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் போட்டோஸ்!...
UPI பேமெண்ட் தோல்வியா? இந்த 5 முறைகளை டிரை பண்ணுங்க!
UPI பேமெண்ட் தோல்வியா? இந்த 5 முறைகளை டிரை பண்ணுங்க!...