AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PSL 2026: போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. சிக்கிய ஷஹீன் அஃப்ரிடி, ஃபகர் ஜமான்!

PSL Ball Tampering Controversy: 2026 மார்ச் 29ம் தேதி லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடரின் 6வது போட்டியின் போது, ​​பந்தை சேதப்படுத்திய சர்ச்சை வெடித்தது. அந்தப் போட்டியில் ஃபகர் ஜமான் பந்தை சேதப்படுத்துவதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியானது.

PSL 2026: போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. சிக்கிய ஷஹீன் அஃப்ரிடி, ஃபகர் ஜமான்!
ஷஹீன் அஃப்ரிடி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Mar 2026 14:22 PM IST

இந்தியாவில் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் 2026 (IPL 2026) சீசன் நடைபெற்று வருவது போல், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 நடைபெற்று வருகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக, பிஎஸ்எல் சீசன் பார்வையாளர்கள் இன்றி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், பிஎஸ்எல் சீசனில் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆரம்பத்தில், இந்தத் தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக (Lahore Qalandars) விளையாடும் பாகிஸ்தான் அதிரடி வீரர் ஃபகர் ஜமான் மட்டுமே இந்த சர்ச்சையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார். தற்போது, ​​ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரின் பெயர்களும் வெளிவந்துள்ளது. இது அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: சிஎஸ்கே மீதான காதல்.. களத்திலேயே கதறி அழுத ஜடேஜா.. ரசிகர்கள் அரவணைப்பு!

என்ன நடந்தது..?

2026 மார்ச் 29ம் தேதி லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடரின் 6வது போட்டியின் போது, ​​பந்தை சேதப்படுத்திய சர்ச்சை வெடித்தது. அந்தப் போட்டியில் ஃபகர் ஜமான் பந்தை சேதப்படுத்துவதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியானது. முதலில் பேட் செய்த கராச்சி கிங்ஸ் அணி வெற்றிபெற 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், போட்டியின் கடைசி ஓவருக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஓவர் முடிவதற்குள், ஃபக்கர் பந்தை வாங்கி ஹாரிஸிடம் கொடுத்தார். அப்போது, ​​பந்து சேதப்படுத்தப்பட்டதாக நடுவர் சந்தேகித்தார். அவர் பந்தைக் கேட்டு, லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதித்தார். கராச்சி அணி வெற்றி பெற, கடைசி ஓவரில் இன்னும் 9 ரன்கள் தேவைப்பட்டன. அந்த அணி அந்த ரன்களை வெறும் 3 பந்துகளில் எடுத்தது.

 3 மீதும் குற்றம் சாட்டிய கம்ரான் அக்மல்:


பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி, “ஆதாரங்கள் காட்டுவது போல், ஃபகரின் கதை முடிந்தது. அவருக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கம்ரான் அக்மல் தனது கருத்தைத் தெரிவிக்கையில், “ஃபகர் ஜமான் மட்டுமல்ல, கேப்டன் ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரும் பந்தைச் சேதப்படுத்தியவர்கள். அவர்களும் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம். இப்போது இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்படும், யாருக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்பதைப் பார்ப்பது முக்கியம்” என்றார்.

ALSO READ: குஜராத்தை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் பஞ்சாப்.. இதுவரை யார் ஆதிக்கம்?

கராச்சி கிங்ஸ் வெற்றி:

போட்டியைப் பற்றி பேசுகையில், லாகூர் கலாண்டர்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலக்கை துரத்திய கராச்சி கிங்ஸ், 4 விக்கெட்டுகள் மீதமிருக்க 19.3 ஓவர்களில் வெற்றியைப் பதிவு செய்தது.

Follow Us