IPL 2026: குஜராத்தை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் பஞ்சாப்.. இதுவரை யார் ஆதிக்கம்?
PBKS vs GT: சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் மைதானத்தின் விக்கெட் சற்று கணிக்க முடியாததாக இதுவரை இருக்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனின் (IPL 2026) 4வது போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 31ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் மோதும் இந்த போட்டியானது புதிய சண்டிகரின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்குத் தொடங்கும், டாஸ் இரவு 7:00 மணிக்கு நடைபெறும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில்லும் கேப்டனாக இருப்பார்கள். இந்தநிலையில், இரு அணிகளும் இதுவரை எத்தனை போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன? பிட்ச் அறிக்கை, முழு அணி விவரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: முதலிடத்தில் ராஜஸ்தான்.. எழ முடியாத நிலையில் சிஎஸ்கே.. ஐபிஎல் 2026 புள்ளிகள் அட்டவணை!
பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர்:
ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2025ம் ஆண்டு தனது சிறப்பான கேப்டன்சியால் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இந்த ஆண்டு, ஐபிஎல் பட்டத்திற்காக பஞ்சாப் அணி 19 ஆண்டுகளாகக் காத்திருக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதே அவரது இலக்காக இருக்கும். இதற்கிடையில், குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது அறிமுக சீசனான 2022-ல் பட்டத்தை வென்றது. அடுத்த ஆண்டு, 2023-ல், அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். இருப்பினும், அதன் பிறகு அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. 2024ம் ஆண்டு ஹர்திக் பாண்டியா வெளியேறிய பிறகு, அந்த அணி சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது. இருப்பினும், கடந்த இரண்டு சீசன்களில் அவரால் குஜராத் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.




இதுவரை இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் குஜராத் மூன்று போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. முந்தைய சீசனில், ஐபிஎல் 2025-ல் இரு அணிகளும் ஒரு போட்டியில் மோதின, அதில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024-ல், இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் மோதின. அதில் ஒரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மற்றொரு போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் வெற்றி பெற்றன.
மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:
சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் மைதானத்தின் விக்கெட் சற்று கணிக்க முடியாததாக உள்ளது. கடந்த 2025 ஆண்டு, சில போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்ட நிலையில், மற்ற போட்டிகளில் அணிகள் 120 ரன்களை எட்டுவதற்கே சிரமப்பட்டன. முல்லன்பூரின் வெளிக்களம் மிகவும் வேகமானது. இது சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிறது. இங்குள்ள பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் சாதகமாக செயல்படும். போட்டியின் 2வது பாதியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். பிட்ச் நிலையைக் கருத்தில் கொண்டு, டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.
பஞ்சாப் கிங்ஸ் முழு அணி:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், ஷஷாங்க் சிங், பென் துவர்ஷிஸ், நேஹல் வதேரா, பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, மிட்செல் ஓவன், கூப்பர் கானொலி, அஸ்மத்துல்லாக் ஒமர்க்ஸாய், லோக் குமார், லாக் ஒமர்சாய், ஹர்ப்ரீத் ப்ரார், விஷ்ணு வினோத், சேவியர் பார்ட்லெட், பிரவீன் துபே, விஷால் நிஷாத், சூர்யன்ஷ் ஷெட்ஜ், பைலா அவினாஷ், முஷிர் கான், ஹர்னூர் சிங்.
ALSO READ: சிஎஸ்கே மீதான காதல்.. களத்திலேயே கதறி அழுத ஜடேஜா.. ரசிகர்கள் அரவணைப்பு!
குஜராத் டைட்டன்ஸ் முழு அணி:
ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரஷித் கான், முகமது சிராஜ், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், க்ளென் பிலிப்ஸ், குர்னூர் ப்ரார், அர்ஷத் கான், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, குமார் கஷ்கரி, நிஷாந்த் சந்து, மானவ் சுதர், அனுஜ் ராவத், அசோக் சர்மா, ஜேசன் ஹோல்டர், டாம் பென்டன், லூக் யரா பிரித், லூக் வுட்.