AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CSKvRR : சொதப்பிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 128 ரன்கள் இலக்கு

IPL 2026 : ஐபிஎல் 2026 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் வீரர்கள் சஞ்சு சாம்சன், ருத்துராஜ் கெய்க்வாட் என வரிசையாக தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

CSKvRR : சொதப்பிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 128 ரன்கள் இலக்கு
Cskvrr Ipl 2026
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Mar 2026 21:55 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே அணி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் 2026 போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மற்றும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது. டாஸ்க்கு சற்று முன்னதாக மழை பெய்திருந்தது. இதனால் மைதானம் ஈரப்பதமாக இருந்த நிலையில், அது மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

சொதப்பிய சிஎஸ்கே டாப் ஆர்டர்

அதற்கேற்ப களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அசத்தலான பந்துவீச்சால் சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.

இதையும் படிக்க : காத்திருக்கும் 300 ரன்கள்.. சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட்டம் காட்டுவாரா வைபவ் சூர்யவன்ஷி ?

இந்த ஐபிஎல் 2026 சீசனில் அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சிஎஸ்கேஅணிக்கு, முதல் இரண்டு ஓவர்களிலேயே பெரிய பின்னடைவு ஏற்பட்டது. சஞ்சு சாம்சன் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். தென்னாப்பிரிக்கா வீரர் நன்ட்ரே பர்கர் தனது முதல் ஓவரிலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் அளித்தார்.

அதன்பின், 3வது ஓவரின் கடைசி பந்தில் ஆச்சர் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி கேப்டன் ருத்துராஜ் அதிர்ச்சியளித்தார்.அவர் வெறும் 6 ரன்களில் அவுட்டானது சிஎஸ்கே அணிக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இதன் பின்னர் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை முற்றிலும் சொதப்பியது.  ஆயுஷ் மாத்ரே, மேத்தியூ ஷார்ட், ஷிவம் துபே ஆகியோரும் தொடர்ந்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.  குறிப்பாக ஈரப்பதமான மைதானம் மற்றும் மேகமூட்டமான காலநிலை காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் முழு ஆதிக்கம் செலுத்தினர்.

இதையும் படிக்க : IPL 2026: ஜடேஜா vs சஞ்சு.. இடமாறிய களம்! கவுகாத்தியில் ஆதிக்கம் செலுத்துமா சிஎஸ்கே?

தனியாக போராடிய ஓவர்டன்

ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி வெறும் 8 ஓவர்களில் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். கடந்த சீசனில் லீக் போட்டியிலேயே வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனிலும் அதே பிரச்சனைகளை எதிர்கொள்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் போனாலும், தனியாக போராடிய ஜேமி ஓவர்டன் பொறுப்பாக ஆடி இந்தியாவை சரிவிலிருந்து மெல்ல மீட்டார். இதனால் இந்திய அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடி வருகிறது.

 

 

Follow Us