AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைபவ் அதிரடி – சிஎஸ்கே எளிதாக வீழ்த்தி வெற்றியுடன் துவங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்

IPL 2026 : இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணியை எளிதாக வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் சீசன் 2026ஐ வெற்றியுடன் துவங்கியுள்ளது. குறிப்பாக அதிரடியாக ஆடிய வைபவ் 17 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.

வைபவ் அதிரடி – சிஎஸ்கே எளிதாக வீழ்த்தி வெற்றியுடன் துவங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Mar 2026 23:18 PM IST

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணியை எளிதாக வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் சீசன் 2026ஐ வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஐபிஎல் 2026 சீசனில் 3வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியானது கவுஹாத்தியில் உள்ள பர்ஸ்பரா மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங், பந்து வீச்சு என முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

சொதப்பிய சிஎஸ்கே டாப் ஆர்டர்

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களின் தாக்குலை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் வெறும் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  சிஎஸ்கே அணியில் ஜேமி ஓவர்டன்  மட்டுமே கடைசி வரை போராடி 43 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பர்கர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும்  ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவி பஸ்னோய் உள்ளிட்டோரும் ஆதிக்கம் செலுத்தினர்.

இதையும் படிக்க : காத்திருக்கும் 300 ரன்கள்.. சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட்டம் காட்டுவாரா வைபவ் சூர்யவன்ஷி ?

இதனையடுத்து 128 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்கு இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான துவக்கம் தந்தார்.  குறிப்பாக அவர் வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் அடித்து சிஎஸ்கே பந்து வீச்சாளர்களின் பந்துகளை 4 பக்கமும் சிதரடித்தார். குறிப்பாக, பவர் பிளே ஓவர்களில் அவரது அதிரடியான ஆட்டம் அந்த அணிக்கு பெரிதும் கைகொடுத்தது.

சிஎஸ்கே பந்துவீச்சை துவம்சம் செய்த வைபவ்

அவருடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் அமைதியான மற்றும் நிதானமான இன்னிங்ஸ் விளையாடி அணியை வெற்றி தேடி தந்தார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 பந்துகள் மீதமிருக்கும்போதே இலக்கை எட்டியது, இது அவர்களின் முழுமையான ஆதிக்கத்தை காட்டுகிறது இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பந்துவீச்சு என முழுமையான செயல்பாடே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிக்க : IPL 2026: சிஎஸ்கே அணிக்கு மற்றொரு சிக்கல்.. காயத்தில் சிக்கிய பிரெவிஸ்..!

பவுலிங்கில் எதிரணியின் வேகத்தை கட்டுப்படுத்தி, பேட்டிங்கில் அதிரடியாக ஆடி இந்த ஐபிஎல் 2026 சீசனை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.  குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்களின் சிறப்பான ஃபார்மும் அந்த அணிக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. முதல் சீசனில் கோப்பை வென்ற அந்த அணி நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Follow Us