AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WTC 25-27 Final: 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எப்போது..? வெளியான தேதி விவரம்!

World Test Championship 2027 Final: இங்கிலாந்து அணியும் தனது சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையையும் அறிவித்துள்ளது. அதில் பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள், வங்கதேசத்திற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஆஷஸ் தொடர் ஆகியவை அடங்கும். மேலும், இங்கிலாந்து நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடும்.

WTC 25-27 Final: 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எப்போது..? வெளியான தேதி விவரம்!
தென்னாப்பிரிக்கா அணிImage Source: ICC/Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jul 2026 17:38 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (World Test Championship) 4வது பதிப்பு நடைபெற்று வருகிறது, இதன் இறுதிப் போட்டி 2027-ல் நடைபெறும் என்பது எல்லாரும் அறிந்ததே. அதன்படி, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி, இங்கிலாந்தில் உள்ள ஓவல் ஸ்டேடியத்தில் வருகின்ற 2027 ஜூன் 9 முதல் 2027 ஜூன் 13 வரை நடைபெறும். இத்தொடருக்கான முன்னணி அணிகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளன. அதே சமயம், இந்தியாவின் (Indian Cricket Team) நிலைமை வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளன.

ALSO READ: காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள் எப்போது களமிறங்குவார்கள்..? முழு அட்டவணை இதோ!

பார்டர்-கவாஸ்கர் கோப்பை எப்போது..?


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான பார்டர்-கவாஸ்கர் கோப்பையுடன் இந்த 2027ம் ஆண்டு தொடங்குகிறது. இம்முறை, ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரானது வருகின்ற 2027 ஜனவரி 21 முதல் 2027 மார்ச் 3 வரை இரு நாடுகளுக்கும் இடையே 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.

  • முதல் டெஸ்ட் – 2027 ஜனவரி 21–25, நாக்பூர்
  • 2வது டெஸ்ட் – 2027 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 2 வரை, சென்னை
  • 3வது டெஸ்ட் – 2027 பிப்ரவரி 11-15, கவுகாத்தி
  • 4வது டெஸ்ட் – 2027 பிப்ரவரி 19-23, ராஞ்சி
  • 5வது டெஸ்ட் – 2027 பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை, அகமதாபாத்

இதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணியும் தனது சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையையும் அறிவித்துள்ளது. அதில் பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள், வங்கதேசத்திற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஆஷஸ் தொடர் ஆகியவை அடங்கும். மேலும், இங்கிலாந்து நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடும்.

நெருங்கி வரும் ஆஷஸ் தொடர்:

ஆஷஸ் தொடர் என்பது ஒரு கிரிக்கெட் போட்டித் தொடராகும். இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதுகின்றன. இத்தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 ஜூன் 18 முதல் நாட்டிங்ஹாமில் நடைபெறும். 2வது டெஸ்ட் போட்டி 2027 ஜூன் 30 அன்று லார்ட்ஸிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி 2027 ஜூலை 8ம் தேதி எட்ஜ்பாஸ்டனும் நடைபெறும்.

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி 2027 ஜூலை 21ம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறும். அதேவேளையில், ஐந்தாவது போட்டி 2027 ஜூலை 29ம் தேதி ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெறும்.

ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறதா? வெளியான அட்டவணை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் உள்நாட்டுப் போட்டி அட்டவணை விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏனெனில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மாற்றப்படவுள்ளார். பிரெண்டன் மெக்கல்லம் நீக்கப்பட்டுள்ளார். தற்போது ஜஸ்டின் லாங்கர் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளார்.

 

Follow Us