IPL 2026: டிசம்பரில் மினி ஏலம்.. சிஎஸ்கே அணி இந்த 4 வீரர்களை விடுக்கிறதா..?
Chennai Super Kings: ஐபிஎல் 19வது பதிப்பு அடுத்த ஆண்டு 2026 மார்ச் மாதம் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலம் 2025 டிசம்பர் மாத நடுப்பகுதியில் (இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம்) நடைபெறும். இது இந்தியாவிற்கு வெளியே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான (IPL 2026) ஏலம் வருகின்ற 2025 டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளின் நிர்வாகமும் வருகின்ற 2025 நவம்பர் 15ம் தேதிக்குள் தங்கள் விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி, ஐபிஎல் 2026 சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவார் என சிஎஸ்கே நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட வாய்ப்புள்ள 4 வீரர்கள் பற்றி பார்க்கலாம்.
ஐபிஎல் 19வது பதிப்பு அடுத்த ஆண்டு 2026 மார்ச் மாதம் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலம் 2025 டிசம்பர் மாத நடுப்பகுதியில் (இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம்) நடைபெறும். இது இந்தியாவிற்கு வெளியே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ALSO READ: சாம்சனை சிஎஸ்கே கேப்டனாக தோனி மாற்றுவாரா? ஒப்பந்தம் குறித்த முக்கிய அப்டேட்!




தீபக் ஹூடா
கடந்த 2025 ஐபிஎல் ஏலத்தில் தீபக் ஹூடாவை சிஎஸ்கே ரூ.1.7 கோடிக்கு வாங்கியது. முன்னதாக, தீபக் ஹூடா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே அணிக்காக அவரது செயல்திறன் மோசமாக இருந்தது. சிஎஸ்கே அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 5 இன்னிங்ஸ்களில் 6.20 சராசரியாக 31 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அவரை வரவிருக்கும் ஐபிஎல்லுக்கு விடுவித்தால், அவர்களுக்கு மேட்ச் ஃபினிஷராக இருக்கக்கூடிய ஒரு அற்புதமான பேட்ஸ்மேன் கிடைக்கலாம்.
தீபக் ஹூடா 2015ம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். அதன்பிறகு ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் லக்னோ அணிக்காக விளையாடி, கடைசி சீசனில் சிஎஸ்கே அணியில் இணைந்தார். இதுவரை தீபக் ஹூடா 125 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்கள் உட்பட 1496 ரன்கள் எடுத்தார்.
ராகுல் திரிபாதி
கடந்த சீசனுக்காக ராகுல் திரிபாதியை சிஎஸ்கே ரூ.3.40 கோடிக்கு வாங்கியது. ஆமால், ராகுல் திரிபாதி எதிர்பார்த்தபடி செயல்படத் தவறிவிட்டார். சென்னை அணிக்காக இன்னிங்ஸ்களில் 11 சராசரியுடன் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், ராகுல் திரிபாதி விளையாடும் XI அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்படி, சென்னை அணி அவரையும் விடுவிக்கலாம்.
ஐபிஎல்லில் 2017 முதல் விளையாடி வரும் ராகுல் திரிபாதி, 5 அணிகளுக்காக மொத்தம் 100 போட்டிகளில் விளையாடி, 26.33 சராசரியாக 2291 ரன்கள் எடுத்துள்ளார்.
டெவோன் கான்வே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் ரூ.6.25 கோடிக்கு (தோராயமாக $1.5 மில்லியன் அமெரிக்க டாலர்) டெவன் கான்வேயை ஒப்பந்தம் செய்தது. கடந்த இரண்டு சீசன்களாகவும் கான்வே சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த ஐபிஎல்லின் தொடக்க ஆட்டங்களில் சிஎஸ்கே ரச்சின் ரவீந்திராவுடன் தொடக்கம் தந்தாலும், அவரது ஃபார்ம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. சென்னை அணிக்காக ஐபிஎல் 2026 சீசனில் 6 இன்னிங்ஸ்களில் 26 சராசரியுடன் 2 அரை சதங்களுடன் 156 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: ஆர்சிபி முதல் இந்திய மகளிர் அணி வரை.. இந்த ஆண்டு 3 புதிய சாம்பியன்கள்..!
விஜய் சங்கர்
கடந்த ஐபிஎல் 2026 சீசனுக்காக விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 1.2 கோடிக்கு வாங்கியது. 2025 ஆம் ஆண்டில் விஜய் ஷங்கர் 5 இன்னிங்ஸ்களில் 118 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அவர் சிஎஸ்கே அணிக்காக பந்து வீசவில்லை. சிஎஸ்கே அவரை விடுவிப்பதை பரிசீலிக்கலாம்.
விஜய் சங்கர் இதுவரை ஐபிஎல்லில் 78 போட்டிகளில் விளையாடி, 65 இன்னிங்ஸ்களில் 1233 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.