AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs WI: கடைசி நேரத்தில் பவுல் – ஹோல்டர் காட்டடி.. இந்திய அணிக்கு 196 ரன்கள் இலக்கு!

T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், அரையிறுதிக்கு செல்ல இந்திய அணி 196 ரன்கள் இலக்கை எட்ட வேண்டும்.

IND vs WI: கடைசி நேரத்தில் பவுல் – ஹோல்டர் காட்டடி.. இந்திய அணிக்கு 196 ரன்கள் இலக்கு!
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 01 Mar 2026 21:40 PM IST

2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) சூப்பர் 8 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், அரையிறுதிக்கு செல்ல இந்திய அணி 196 ரன்கள் இலக்கை எட்ட வேண்டும். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் எடுத்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஈடன் கார்டன் மைதானத்தில் எடுக்கப்பட்ட நான்காவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கிடையில், அரையிறுதிக்கு முன்னேற விரும்பினால், இந்தியா (Indian Cricket Team) இந்த மைதானத்தில் மிகப்பெரிய டி20 ரன் சேஸிங்கை செய்ய வேண்டும். கொல்கத்தாவில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் கடைசி 30 பந்துகளில் 75 ரன்கள் எடுத்ததால், இந்திய பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ALSO READ: துபாயில் சிக்கித் தவித்த பி.வி. சிந்து.. அவர் சொன்ன ஷாக் தகவல்கள்!

மிகப்பெரிய ரன் சேஸிங் தேவை:

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் சேசிங் வெறும் 158 ரன்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 158 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம் இந்தியா இங்கு அதிகபட்ச ரன் சேசிங் சாதனையையும் படைத்தது. இங்கு இதுவரை 160 ரன்கள் கூட சேசிங் செய்யப்படவில்லை என்றாலும், இன்றைய போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அதை விட 36 ரன்கள் அதிகமாக சேசிங் செய்ய வேண்டியிருக்கும்.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோருடன் மெதுவாக ஆனால் நிலையான தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 68 ரன்கள் கூட்டணியை அமைத்தனர். இந்த கூட்டணியை வருண் சக்கரவர்த்தி முறியடித்தார். ஒரு கட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒன்பது ஓவர்களில் 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

கடைசி 11 ஓவர்களில் 126 ரன்கள்:

முதல் ஒன்பது ஓவர்கள் 69 ரன்கள் எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அடுத்த 11 ஓவர்களில் 126 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ஹோல்டர் மற்றும் ரோவ்மன் பவுல் ஆகியோர் கடைசி 5 ஓவர்களில் அதாவது, 35 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தனர். இதில், ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களும், பவல் 19 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர்.

ALSO READ: அரையிறுதியை நோக்கி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்.. கொல்கத்தாவில் 100 சதவீத வெற்றியுடன் WI.. திணறுமா IND?

கிட்டத்தட்ட அனைத்து இந்திய பந்து வீச்சாளர்களும் பந்துவீச்சில் சொதப்பினர். இருப்பினும், விக்கெட் வேட்டையில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Follow Us