IPL 2026: திருமணம் முடிந்த கையோடு கிரிக்கெட் பயிற்சி.. அர்ஜுன் டெண்டுல்கரை அதிர்ச்சியோடு பார்த்த ரிஷப் பண்ட்!
Arjun Tendulkar Rishabh Pant Video: அர்ஜுன் டெண்டுல்கர் 2021 முதல் 2025 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், இந்த 5 ஆண்டுகளில் மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இப்போது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைவது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இதனை தொடர்ந்து, ஐபிஎல் 2026 தொடரில் ஒரு புதிய அணியில் இணைந்துள்ளார். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த அர்ஜுன், 2026-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் (Lucknow Super Giants) இணைந்துள்ளார். ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் லக்னோ அணி அர்ஜுன் டெண்டுல்கரை (Arjun Tendulkar) ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியது. அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, அர்ஜுன் டெண்டுல்கரும் ரிஷப் பந்தும் ஒன்றாகப் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ALSO READ: 2008 முதல் 2025 வரை.. ஐபிஎல்லில் பர்ப்பிள் மற்றும் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் பட்டியல்!




சானியா சந்தோக்கை திருமணம் முடித்த அர்ஜுன் டெண்டுல்கர்:
Looks like Sachin sir gave last chanse to Arjun Tendulkar ⚠️
Rishabh – tera bat ka kitna weight h ? , Yuvi paaji ke sath full time practice, Saadi ke din bhi
Arjun – 1220 kg , Papa to 1320-30 ki bolte h , kam weight se jata nhi h shot !! 🤯
— Kiara (@crickiara) March 18, 2026
உலக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த 2026ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி சானியா சந்தோக்கை திருமணம் செய்தார் இருப்பினும், மறுநாளே அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கிரிக்கெட் பயிற்சிக்குச் சென்றார். இதைக் கேட்டு ரிஷப் பந்த் அதிர்ச்சியடைந்தார்.
லக்னோ அணியில் இணைந்த அர்ஜுன் டெண்டுல்கரிடம் ரிஷப் பண்ட் ஆச்சரியத்துடன், ”நீங்களும் யுவராஜ் சிங்குடன் முழு நேரமாகப் பயிற்சி செய்து கொண்டிருந்தீர்கள். திருமணம் முடிந்த மறுநாளே. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறீர்கள் சகோதரா,” என்றார்.
அர்ஜுன் டெண்டுல்கர்:
அர்ஜுன் டெண்டுல்கர் 2021 முதல் 2025 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், இந்த 5 ஆண்டுகளில் மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இப்போது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைவது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையலாம். எல்.எஸ்.ஜி அணிக்காக சிறப்பாக செயல்படுவதன் மூலம், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருமுனையாக அமையலாம். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் போட்டியை வருகின்ற 2026 ஏப்ரல் 1ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: சிஎஸ்கே முதல் எல்எஸ்ஜி வரை.. ஐபிஎல்லில் விளையாடும் 10 அணிகளின் முழு விவரம்..!
1.25 கிலோ கிரிக்கெட் பேட்:
அர்ஜுன் டெண்டுல்கர், தன் தந்தை சச்சின் டெண்டுல்கரைப் போலவே, கனமான மட்டையைக் கொண்டு பேட் செய்ய விரும்புகிறார். லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, தனது பேட்டின் எடை 1220 கிராம், அதாவது தோராயமாக 1.25 கிலோகிராம் என்று அர்ஜுன் டெண்டுல்கர் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரிஷப் பந்த், கனமான மட்டையைக் கொண்டு விளையாடுவதில் என்ன நன்மை என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அர்ஜுன் டெண்டுல்கர், “பந்து பேட்டில் படும் சரியான நேரத்தில் ஆடுகளத்தைக் கடந்து செல்லும் என்று விளக்கினார். மேலும், தனது தந்தை சச்சின் டெண்டுல்கர் 1310-1315 கிராம் எடை கொண்ட மட்டையைப் பயன்படுத்தி விளையாடுவார் என்றும் தெரிவித்திருந்தார்.