AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் உடன்பாடு.. தொகுதிகள் பங்கீடு.. எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு!

Puducherry NDA Allaince: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் என். ஆர். காங்கிரஸ்- பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடையே தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. தொகுதிகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளன.

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் உடன்பாடு.. தொகுதிகள் பங்கீடு.. எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு!
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 20 Mar 2026 16:10 PM IST

புதுச்சேரியில் ஏப்ரல் 9- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் என். ஆர். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு வாய்மொழியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், என். ஆர். காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி அதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தார். மேலும், புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து கோரிக்கையையும் ரங்கசாமி முன் வைத்திருந்தார். இதில், இரு கட்சிகளிடையை உடன்பாடு எட்டப்படாத நிலை இருந்து வந்தது.

என்.ரங்கசாமியை சமரசம் செய்த பாஜக தலைமை

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் நடைபெற இருந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கூட்டத்தில் என்.ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். இதனால், சுமார் 2 மணி நேரமாக காத்திருந்துவிட்டு அங்கிருந்து புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் புறப்பட்டு சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு பாஜக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

மேலும் படிக்க: “தமிழ்நாடு vs டெல்லி”.. நாம் சொன்னது போலவே முடிவெடுப்பது டெல்லிதான்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!

புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து பரிசீலனை

இதில், பாஜக தலைமை, என். ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில், புதுச்சேரியில் ஹோட்டலில் தங்கியுள்ள பாஜக மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை, முதல்வர் என். ரங்கசாமி இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அப்போது, புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து குறித்து பரிசீலனை செய்வதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில், ரங்கசாமிக்கு உடன்பாடு ஏற்பட்ட நிலையில். லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.

என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக தொகுதி பங்கீடு

இதை தொடர்ந்து, என். ஆர். காங்கிரஸ்- பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், என். ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. அதன்படி, ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க: இறுதி கட்டத்தை எட்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. அதிமுக – 162 இடங்கள், பாஜக – 31 இடங்கள்? பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதி?

Follow Us