AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்ரீ ராம நவமி 2026: வழிபாடு, விரத முறைகள் மற்றும் பலன்கள்.. முழு விவரம்!!

Ram Navami 2026: ராமபிரான் கோடை காலத்தில் அவதரித்தவர் என்பதால், குளிர்ச்சி தரும் பானங்களான பானகம் (எலுமிச்சை + வெல்லம்) மற்றும் நீர் மோர் ஆகியவை கட்டாயம் வைக்கப்பட வேண்டும். இவற்றுடன் அன்னம், பாயசம், வடை, பருப்பு மற்றும் கனிகளையும் படைக்கலாம்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Mar 2026 15:28 PM IST
இந்து மதத்தில் ராம அவதாரம் மிகவும் போற்றப்படும் ஒரு அவதாரமாகும். தீமையை அழித்து நன்மையை நிலைநாட்ட மகாவிஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரமே ராம அவதாரம். ஸ்ரீ ராமபிரான் அவதரித்த இந்தத் திருநாளை 'ராம நவமி' என்று நாடு முழுவதும் கொண்டாடுகிறோம். கலியுகத்தில் ராம நாமத்தைச் சொன்னாலே அனைத்துப் புண்ணியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

1 / 5
2026 ராம நவமி தேதி: மார்ச் மாதம் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராம நவமி கொண்டாடப்பட உள்ளது. நவமி திதி ஆரம்பம்: மார்ச் 26, வியாழக்கிழமை மதியம் 2:18 மணி. நவமி திதி முடிவு: மார்ச் 27, வெள்ளிக்கிழமை மதியம் 12:36 மணி. வழிபாட்டிற்கு உகந்த நேரம்: மதியம் 12.06 மணி முதல் 2.31 மணி வரை மிகச் சிறப்பான நேரமாகக் கருதப்படுகிறது. சூரிய உதயத்தின் போது இருக்கும் திதியைக் கணக்கில் கொள்வதால், மார்ச் 27-ஆம் தேதியே நாம் ராம நவமியைக் கொண்டாடுகிறோம்.

2 / 5
அஷ்டமி மற்றும் நவமி திதிகளின் சிறப்பு: பொதுவாகச் சுப காரியங்களுக்கு அஷ்டமி மற்றும் நவமி திதிகளை மக்கள் தவிர்ப்பதுண்டு. இதனால் வருத்தமுற்ற திதி தேவதைகள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டபோது, "மக்கள் உங்களைக் கொண்டாடும் படி செய்கிறேன்" என்று வாக்குக் கொடுத்தார். அதன்படி ராம அவதாரத்தை நவமியிலும், கிருஷ்ண அவதாரத்தை அஷ்டமியிலும் நிகழ்த்தி அந்தத் திதிகளுக்குப் பெருமை சேர்த்தார் எம்பெருமான்.

3 / 5
வழிபாட்டு முறைகள்: ராமபிரான் பட்டாபிஷேகப் படம் அல்லது விக்கிரகத்தைச் சந்தனம், குங்குமம் மற்றும் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டில் ராமாயணப் புத்தகம் இருந்தால் அதையும் வைத்துப் பூஜிப்பது விசேஷம். மணப்பலகையில் கோலமிட்டு, அரிசி மாவால் "ஸ்ரீ ராமஜெயம்" என்று எழுதி அதற்குப் பூக்கள் தூவி வழிபடலாம். தாமரை மலர்கள் அல்லது துளசி மாலை கொண்டு ராம நாமத்தைச் சொல்லி அர்ச்சிப்பது மிகுந்த பலனைத் தரும்.

4 / 5
விரதப் பலன்கள்: ராம நவமி விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் திருமகளின் (லட்சுமி) அருள் கிடைத்துச் செல்வம் பெருகும். பகைவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தீராத வியாதிகள் நீங்கும் மற்றும் இழந்த பொருட்களை மீண்டும் அடையளாம்.புத்திர பாக்கியம் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். "ஸ்ரீ ராமஜெயம்" என்ற மகா மந்திரத்தை அன்றைய தினம் முழுவதும் மனதாரச் சிந்தித்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெற்று நலமுடன் வாழலாம்.

5 / 5
Follow Us