AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பெங்களூரு – லக்னோ அணிகள் இன்று மோதல்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?

RCB vs LSG Match 23 Prediction: ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது 4வது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்ய முயற்சிக்கும். அதே சமயம் லக்னோ அணி ஹாட்ரிக் வெற்றிகளைப் பெறும் நோக்கில் உள்ளது. காயம் காரணமாக இந்த போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

IPL 2026: பெங்களூரு – லக்னோ அணிகள் இன்று மோதல்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?
பெங்களூரு - லக்னோ
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Apr 2026 17:33 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 23வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது இன்று அதாவது 2026 ஏப்ரல் 15ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.ஏ.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும். இப்போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) தங்களது 4வது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்ய முயற்சிக்கும். அதே சமயம் லக்னோ அணி ஹாட்ரிக் வெற்றிகளைப் பெறும் நோக்கில் உள்ளது. காயம் காரணமாக இந்த போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. விராட் கோலி இல்லாமல் பெங்களூரு அணி களமிறங்கினால், லக்னோ அணிக்கு ஒருவகையில் சாதகமாக அமையலாம்.

ALSO READ: லக்னோவை பெண்ட் எடுக்குமா பெங்களூரு..? இதுவரை யார் ஆதிக்கம்..?

ஐபிஎல் 2026ல் இரு அணிகளின் நிலைமை:

இரு அணிகளும் இதுவரை தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தப் போட்டிகளில், பெங்களூரு அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது. லக்னோ அணியை பொறுத்தவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிராக 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் அணிகளிடம் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. எனவே, இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறக்கூடும் என்பதை காண ஆவலாக இருக்கும்.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே 6 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 4 போட்டிகளில் பெங்களூரு வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் லக்னோ வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2025 சீசனில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு போட்டியில் பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யார் வெற்றி பெற முடியும்?

நேருக்கு நேர் மோதல் செயல்திறன், முந்தைய சீசன்கள் மற்றும் நடப்பு சீசனின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், இன்றைய போட்டியில் ஆர்சிபி வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

ALSO READ: காலில் கட்டுடன் தீவிர பயிற்சி.. ஆர்சிபிக்காக களம் காணும் கிங் கோலி..?

இரு அணிகளின் விவரம்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், முகுல் சவுத்ரி, ஜார்ஜ் லிண்டே, முகமது ஷமி, அவேஷ் கான், திக்வேஷ் சிங் ரதி, பிரின்ஸ் யாதவ், மணிமாறன் சித்தார்த், ஷாபாஸ் அஹ்மத், ஷாபாஸ் அஹ்மத். அன்ரிச் நார்ட்ஜே, ஜோஷ் இங்கிலிஸ், ஹிம்மத் சிங், மொஹ்சின் கான், அர்ஜுன் டெண்டுல்கர், ஆகாஷ் மஹராஜ் சிங், அக்ஷத் ரகுவன்ஷி, அர்ஷின் குல்கர்னி, நமன் திவாரி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

பிலிப் சால்ட், விராட் கோலி , தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, சுயாஷ் ஷர்மா, ரசிக் சலாம் தார், வெங்கடேஷ் ஐயர், ஸ்வாப் பெத்தேல், ஜேக்கப் பெத்தேல், ஜேக்கப் பெத்தேல். ஹேசில்வுட், ஜோர்டான் காக்ஸ், நுவான் துஷாரா, விக்கி ஓஸ்ட்வால், விஹான் மல்ஹோத்ரா, அபிநந்தன் சிங், கனிஷ்க் சவுகான், சாத்விக் தேஸ்வால்.

Follow Us