AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: லக்னோவை பெண்ட் எடுக்குமா பெங்களூரு..? இதுவரை யார் ஆதிக்கம்..?

RCB vs LSG: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட்டும் தலைமை தாங்குகின்றனர். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் இந்த இரு அணிகளும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே மோதின என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில், 228 ரன்கள் என்ற இலக்கை 18.4 ஓவர்களில் எட்டி, ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2026: லக்னோவை பெண்ட் எடுக்குமா பெங்களூரு..? இதுவரை யார் ஆதிக்கம்..?
எல்எஸ்ஜி Vs ஆர்சிபி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Apr 2026 08:00 AM IST

இந்தியன் பிரீமியர் லீக் 2026-ன் (IPL 2026) 23-வது போட்டியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையே இன்று அதாவது 2026 ஏப்ரல் 15ம் தேதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிக்கு ரஜத் படிதாரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட்டும் தலைமை தாங்குகின்றனர். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் இந்த இரு அணிகளும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே மோதின என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில், 228 ரன்கள் என்ற இலக்கை 18.4 ஓவர்களில் எட்டி, ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ஜிதேஷ் சர்மா 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ALSO READ: இரண்டாவது வெற்றியின்மூலம் SRH முன்னிலை.. தத்தளிக்கும் KKR.. முதலிடத்தில் யார்?

பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் பிட்ச் ரிப்போர்ட்:

ஐபிஎல் 2026-ன் 23-வது போட்டியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த மைதானமான எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி பொதுவாக ரன் சேஸிங்கையே விரும்பும். இது அதிக ரன்கள் குவிக்கப்படும் ஒரு மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு கடைசியாக நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 250 ரன்களை தற்காத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் இதுவரை 6 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பெங்களூரு அணி அதிகபட்சமாக 4 போட்டிகளிலும், லக்னோ அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ALSO READ: இந்திய அணிக்கு அழைப்பு..? 15 வயதில் அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி!

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, சுயாஷ் சர்மா.

இம்பாக்ட் வீரர்: அபிநந்தன் சிங்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், முகுல் சவுத்ரி, ஜார்ஜ் லிண்டே, முகமது ஷமி, அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்.

இம்பாக்ட் வீரர்: திக்வேஷ் ரதி.

Follow Us