AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஆர்சிபியை ஆட்டம் காண வைக்குமா ஜிடி..? நேருக்கு நேரில் யார் ஆதிக்கம்?

RCB vs GT Head to Head: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோற்ற பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது.

IPL 2026: ஆர்சிபியை ஆட்டம் காண வைக்குமா ஜிடி..? நேருக்கு நேரில் யார் ஆதிக்கம்?
ரஜத் படிதார் Vs சுப்மன் கில்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Apr 2026 16:56 PM IST

நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசனின் (IPL 2026) 34வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 24ம் தேதி மோதுகின்றன. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் நோக்கில் களமிறங்கும். நடப்பு சாம்பியனான ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான தங்களது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணியிடம் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான தங்களது கடைசிப் போட்டியில் தோல்வியடைந்தது.

ALSO READ: முன்னேறிய ஆர்ஆர்.. சரிந்த ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச்.. புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே நிலைமை என்ன?

குஜராத் டைட்டன்ஸுக்கு மோசமான தொடக்கம்:

மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோற்ற பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது. பின்னர், மும்பை இந்தியன்ஸிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, தங்களின் 3 போட்டிகள் கொண்ட வெற்றித் தொடரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனை:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதியதில் சமமான வெற்றிப் பதிவைக் கொண்டுள்ளன. இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில், இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளின் முதல் மோதலானது கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்றது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி கடைசியாக மோதியதில் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றது.

ALSO READ: 7 போட்டிகளில் 6 புள்ளிகள்… சிஎஸ்கே பிளே ஆஃப் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்..?

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ரஜத் படிதார் (கேப்டன்), பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் பாடிக்கல், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம்.

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ்/ஜேசன் ஹோல்டர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அசோக் சர்மா.

Follow Us