AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சொந்த மண்ணில் வீழ்ந்த லக்னோ.. 2வது வெற்றியை பதிவு செய்த குஜராத்!

LSG vs GT Highlights: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் மட்டுமே 30 ரன்களை எடுத்திருந்தார்.

IPL 2026: சொந்த மண்ணில் வீழ்ந்த லக்னோ.. 2வது வெற்றியை பதிவு செய்த குஜராத்!
குஜராத் டைட்டன்ஸ்Image Source: GT/X
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 12 Apr 2026 19:36 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 12ம் தேதி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் ஜோஸ் பட்லரின் அரைசதங்கள் உதவியுடன் ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் அணிக்கு 2வது தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றுத் தந்தன. இதற்கிடையில், பட்லர் தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்து புதிய சாதனையை படைத்தார். இந்த போட்டியில் பட்லர் 60 ரன்களும், கில் 56 ரன்களும் எடுத்து வரலாறு படைத்தனர். முன்னதாக, பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எல்எஸ்ஜி அணியின் பேட்டிங் வரிசையை சீர்குலைத்தார்.

ALSO READ: அம்பயருடன் வாக்குவாதம்.. நோட்டமிட்ட ஐசிசி.. ராணாவுக்கு அபாராதம்!

164 ரன்கள் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் மட்டுமே 30 ரன்களை எடுத்திருந்தார். வேறு யாரும் சொல்லும்படி சிறப்பாக செயல்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு பிரசித் கிருஷ்ணா அடித்தளம் அமைத்தார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் பந்துவீசி, வெறும் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது, ஐபிஎல் 2026 சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பிரசித் கிருஷ்ணா பர்ப்பிள் கேப்பை தன்வசம் வைத்துள்ளார்.

165 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக 45 ரன்கள் சேர்த்தனர். கடந்த 2025 ஐபிஎல் சீசனின் ஆரஞ்சு தொப்பியை வென்ற சுதர்ஷன், 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், கில் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் நிதானமாக 84 ரன்கள் சேர்த்து குஜராத்தை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றனர். கில் 40 பந்துகளில் 56 ரன்களும், பட்லர் 60 ரன்களும் எடுத்து அட்டமிழக்க வாஷிங்டன் சுந்தர் 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து மீதமுள்ள ரன்களைக் குவித்தார். இறுதியாக, அதிரடி வீரர் ராகுல் தெவாடியா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, குஜராத் அணி எட்டு பந்துகள் மீதமிருக்க போட்டியை வென்றது. இது குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் ரேட்டையும் சற்று உயர்த்தியது.

ALSO READ: அழுகை ஒன்னும் வேண்டாம்.. காணாமல் கதறி அழுத சிறுவன்.. சாம்சன் கொடுத்த சர்பரைஸ்!

டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்த ஜோஸ் பட்லர்:

ஜோஸ் பட்லர் தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 14,000 ரன்களைக் கடந்த உலகின் 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக கிறிஸ் கெய்ல், கீரான் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். லக்னோ அணிக்கு எதிராக 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தபோது பட்லர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை 176 ரன்கள் எடுத்துள்ள பட்லர், ஆரஞ்சு கேப் போட்டியிலும் உள்ளார்.

Follow Us