AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஈடன் கார்டனில் அடுத்தடுத்து மழை எச்சரிக்கை.. KKR-க்கு தள்ளிப்போகும் பிளே ஆஃப் கனவு!

KKR Playoffs: கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இடையிலான போட்டியின்போது இரவு சுமார் 8 மணியளவில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடங்கி, படிப்படியாக புயலாக மாறியது. நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், பலத்த காற்றும் வீசியது. தொடர்ந்து, இரவு சுமார் 10:30 மணியளவில் மழை நின்றது. அதன் பிறகு மைதானப் பணியாளர்கள் கவர்களை அகற்றி, பிட்சை தயார் செய்ய முயன்றனர்.

IPL 2026: ஈடன் கார்டனில் அடுத்தடுத்து மழை எச்சரிக்கை.. KKR-க்கு தள்ளிப்போகும் பிளே ஆஃப் கனவு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள்Image Source: KKR/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Apr 2026 17:10 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் 12வது போட்டியில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 7ம் தேதி மழை மற்றும் ஈரமான ஸ்டேடியம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி கைவிடப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 25 விக்கெட்டுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றதால், பஞ்சாப் அணி 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. 3.4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்ததால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. ஆட்டநேர முடிவு நேரம் இரவு 11:14 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் பிறகு ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.

ALSO READ: மோசமான தொடக்கம்.. சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்ன?

மழையால் வந்த பிரச்சனை:

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இடையிலான போட்டியின்போது இரவு சுமார் 8 மணியளவில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடங்கி, படிப்படியாக புயலாக மாறியது. நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், பலத்த காற்றும் வீசியது. தொடர்ந்து, இரவு சுமார் 10:30 மணியளவில் மழை நின்றது. அதன் பிறகு மைதானப் பணியாளர்கள் கவர்களை அகற்றி, பிட்சை தயார் செய்ய முயன்றனர். பிட்சும் அவுட்ஃபீல்டும் பெரும்பாலும் நன்றாகவே காணப்பட்டன. ஆனால், பவுண்டரிக்கு அருகிலுள்ள சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. பின்னர் அம்பயர்கள் அபிஜித் பெங்ரி மற்றும் ஜே. மதன கோபால் ஆகியோர் மைதானத்தை ஆய்வு செய்தனர். பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் சௌரவ் கங்குலியும் மைதானத்தை ஆய்வு செய்தார். கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு, இரவு 11 மணிக்கு போட்டியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

தொடரும் சிக்கல்:

ஐபிஎல் 2025 தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இதே போட்டியும் மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. கேகேஆரின் அடுத்த போட்டியானது வருகின்ற 2026 ஏப்ரல் 9ம் தேதி அதே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெறுகிறது, அங்கும் மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: மழை கொடுத்த வாய்ப்பு.. உள்ளே வந்த கேகேஆர்.. திணறும் சிஎஸ்கே.. ஐபிஎல் புள்ளி அட்டவணை!

பிளேஆஃப் போட்டியில் நீடிக்க தங்களது மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறும் நிலையில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த முடிவு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. ஆனால், இந்த மழையால் போட்டி கைவிடப்பட்டதால், கொல்கத்தாவின் நம்பிக்கை கணிதரீதியாக முடிவுக்கு வந்தது மற்ற அணிகளின் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தாலும்கூட, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் மீண்டு வர முடியுமா என்பது தெரியவில்லை. ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் தடுமாறிக் கொண்டிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்ததால், இந்த அடி அவர்களுக்கு இன்னும் பெரிய பின்னடைவாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஒரு புள்ளியை பெற்றது கொல்கத்தாவுக்கு ஓரளவு நல்லதாகவே அமைந்தது.

Follow Us