AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கில்லின் சாகச சதம்.. சுதர்சனின் கிளாசிக் அரைசதம்.. பைனலுக்குள் கால் வைத்த குஜராத் டைட்டன்ஸ்..!

GT vs RR Qualifier 2 Highlights: முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷியின் 96 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் சுப்மன் கில்லின் சதம் மற்றும் சாய் சுதர்சன் அரைசதத்தின் உதவியுடன் 18.4 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

IPL 2026: கில்லின் சாகச சதம்.. சுதர்சனின் கிளாசிக் அரைசதம்.. பைனலுக்குள் கால் வைத்த குஜராத் டைட்டன்ஸ்..!
Gill Qualifier 2 Century
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 29 May 2026 23:45 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 29ம் தேதி நியூ சண்டிகரில் 2வது தகுதிச்சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணி வைபவ் சூர்யவன்ஷியின் 96 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் சுப்மன் கில்லின் சதம் மற்றும் சாய் சுதர்சன் அரைசதத்தின் உதவியுடன் 18.4 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 5வது சீசனில் விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தநிலையில், வருகின்ற 2026 மே 31ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.

ALSO READ: எகிறி அடித்த சூர்யவன்ஷி.. 200ஐ கடந்த ராஜஸ்தான்.. குஜராத்துக்கு 215 ரன்கள் இலக்கு!

214 ரன்கள் குவித்த ராஜஸ்தான்:

இந்த நியூ சண்டிகர் ஸ்டேடியத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில், டாஸ் தோற்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து 214 ரன்கள் குவித்தது. இம்முறை, ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார், ஆனால் முதல் இரண்டு ஓவர்களிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோரின் விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி இழந்தது. இருப்பினும், வைபவ் சூர்யவன்ஷி, ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து அணியை நிலைப்படுத்தினார். வைபவ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், மற்ற பேட்ஸ்மேன்களை விட வேகமாக ரன்களைக் குவித்து வந்தார். இதன்மூலம், வைபவ் இந்த சீசனில் தனது 5வது அரைசதத்தை அடித்தார்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து வைபவ் ஆடமிழக்க, கடைசி ஓவரில், ரஷித் கானின் பந்துவீச்சில் டோனோவன் ஃபெரெய்ரா நான்கு சிக்ஸர்களை விளாசி, வெறும் 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்து அணியை 214 ரன்களுக்கு உயர்த்தினார். குஜராத் அணிக்காக ஜேசன் ஹோல்டர் மற்றும் ககிசோ ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணி இதற்கு முன்பு 210 ரன்களுக்கு மேல் இலக்கை எட்டியதில்லை. இந்தநிலையில், கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் தொடக்க ஜோடி மீண்டும் அணிக்கு ஒரு வலுவான தொடக்கத்தை அளித்தது. ஆனால், சாய் சுதர்ஷன் வெறும் 14 ரன்களில் இருந்தபோது டோனவன் ஃபெரைரா அவரது கேட்சைத் தவறவிட்டார்.

ALSO READ: கேப்டனாக மோசமான செயல்பாடு.. லக்னோ கேப்டன் பதவியிலிருந்து விலகிய ரிஷப் பண்ட்!

வெறும் 26 பந்துகளில் அரைசதம் அடித்த சுதர்ஷனும், 30 பந்துகளில் அரைசதம் அடித்த கில்லும், வெற்றிக்கான அடித்தளத்தையும் அமைத்தனர். இருவரும் வெறும் 13 ஓவர்களில் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ராஜஸ்தானை ஆட்டத்திலிருந்து வெளியேற்றினர். தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் சுதர்ஷன் ஹிட் அவுட் முறையில் ஆட்டமிழந்தபோதிலும், பிளேஆஃப் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை அடித்த கேப்டன் கில், அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். கில் வெறும் 53 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் தெவாடியா ஆகியோர் 18.4 ஓவர்களில் அணியை இலக்கை எட்டச் செய்தனர்.

Follow Us