IPL 2026: புள்ளி பட்டியலில் டெல்லி முன்னேற்றம்.. முதலிடத்தில் நீடிக்கும் ராஜஸ்தான்.. சென்னைக்கு எத்தனையாவது இடம்?
IPL 2026 Points Table: ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தங்களது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, ஐபிஎல் 2026 தொடரை வலுவான தொடக்கத்துடன் தொடங்கியுள்ளது. 2 புள்ளிகளுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிகர ரன் ரேட் +4.171 ஆக உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது பதிப்பில் (IPL 2026) 10 அணிகளும் தங்களது முதல் போட்டிகளில் தற்போது விளையாடி முடித்துள்ளன. இதில், இதுவரை 5 அணிகள் வெற்றியையும், 5 அணிகள் தோல்வியுடன் தொடங்கியுள்ளன. இது ஆரம்பக் கட்டமாக இருந்தாலும், வெற்றி மற்றும் தோல்விகளே பிளேஆஃப் அணிகளைத் தீர்மானிக்கின்றன. நேற்று அதாவது 2026 ஏப்ரல் 1ம் தேதி நடந்த போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி (Delhi Capitals) லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், புள்ளி அட்டவணையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கேப்பிட்டல்ஸ் அணிகளை முந்தி முன்னேறியது. ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை வெற்றி பெற்ற 5 அணிகளுக்கும் தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளன.
ALSO READ: இம்பாக்ட் பிளேயராக வந்து கெத்து.. டெல்லி அணியின் வெற்றிக்கு உதவிய ரிஸ்வி..!




டெல்லி கேபிடல்ஸ் முன்னிலை:
Tristan Stubbs and clutch lower-order partnerships are a match made in heaven ❤️💙
Which of these two incredible efforts was your favourite? 👇#TATAIPL | #KhelBindaas | #LSGvDC | @DelhiCapitals pic.twitter.com/Z1qQN5uCwn
— IndianPremierLeague (@IPL) April 2, 2026
முன்னதாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 141 ரன்களுக்குள் சுருட்டியது. இருப்பினும், 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர், சமீர் ரிஸ்வி (70*) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (39*) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 புள்ளிகளுடன், அணியின் நிகர ரன் விகிதம் +1.397 ஆக உள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் (+0.687) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (+0.509) அணிகளை விட சிறப்பாகும். இதன் அடிப்படையில் புள்ளி அட்டவணையில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்:
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தங்களது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, ஐபிஎல் 2026 தொடரை வலுவான தொடக்கத்துடன் தொடங்கியுள்ளது. 2 புள்ளிகளுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிகர ரன் ரேட் +4.171 ஆக உள்ளது. 2ம் இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிகர ரன் ரேட் +2.907 ஆக உள்ளது. இது ஆரம்பக் கட்டமாக இருந்தாலும், ஒவ்வொரு போட்டியும் புள்ளி அட்டவணையிலும் பிளேஆஃப் போட்டியிலும் முக்கியப் பங்கு வகிக்கும்.
ALSO READ: ராசியில்லாமல் ரன் அவுட்.. 7 ரன்களில் லாக்காகி வெளியேறிய ரிஷப் பண்ட்!
ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் -0.509 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (-0.687) 7வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (-1.397) 8வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (-2.907) 0வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (-4.171) 10வது இடத்திலும் உள்ளன.