IPL 2025: ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தானால் என்ன நடக்கும்..?
Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders: ஐபிஎல் 2025 சீசனின் முக்கியமான போட்டி மே 17 அன்று பெங்களூருவில் RCB மற்றும் KKR அணிகள் இடையே நடைபெற உள்ளது. மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதால் போட்டி ரத்து செய்யப்படலாம். RCB வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதி, KKR வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனானது மீண்டும் வருகின்ற 2025 மே 17ம் தேதி பெங்களூருவில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் (Royal Challengers Bengaluru), அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கும் இடையே தொடங்குகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையே பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அன்றைய நாளின்போது, மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துகொள்ள விரும்பும். அதேநேரத்தில், பெங்களூரு அணி பிளே ஆஃப்களுக்கு செல்லும் முதல் அணி என்ற பெருமையை பெறும். இந்த போட்டி மழை காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
புள்ளிகள் பட்டியல்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றிபெற வேண்டியது முக்கியம். ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி 12 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
கொல்கத்தா அணி பெங்களூரு அணியிடம் தோற்றால், ஐபிஎல் 2025 சீசனில் பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறும் 4வது அணியாக மாறும். இப்போது, இந்த இரு அணிகளும் மழை ஒரு பிரச்சனையாக மாறலாம்.
2025 மே 17 அன்று பெங்களூருவில் வானிலை எப்படி..?
2025 மே 13ம் தேதியான நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் பெங்களூருவை அடைந்தபோதும், பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அதேபோல், 2025 மே 14ம் தேதியான இன்று இரவும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டி 2025 மே 17ம் தேதி இரவும் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும். நகரில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, 2025 மே 17ம் தேதி பெங்களூருவில் மழை பெய்ய 75 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், போட்டி ரத்தானால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பாதிப்புதான்.
தலா 1 புள்ளி:
பெங்களூருவில் மழை பெய்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கபப்டும். அதேநேரத்தில் பெங்களூரு அணி 17 புள்ளிகளை பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பதன் மூலம் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறும்.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளை பெறும். மீதமுள்ள ஒரு போட்டியில் 14 புள்ளிகள் மட்டுமே பெற்று வெளியேறும். அதேசமயம் டெல்லி vs மும்பை போட்டியில் யார் வெற்றி பெற்றாலும், 14 புள்ளிகளை பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துகொள்வார்கள். இதையடுத்து, அடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆஃப் செல்வார்கள்.