LSG vs RCB: விரட்டிய விராட் கோலி.. முடித்து கொடுத்த ஜிதேஷ் சர்மா.. லக்னோவை காலி செய்த பெங்களூரு!

Royal Challengers Bengaluru: ஐபிஎல் 2025 இறுதி லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 227 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 118 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி, ஜிதேஷ் சர்மா (85*) மற்றும் மயங்க் அகர்வால் (41*) ஆகியோரின் அற்புதமான இணைப்பால் 228 ரன்களை விரட்டி அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் பெங்களூரு அணி முதல் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

LSG vs RCB: விரட்டிய விராட் கோலி.. முடித்து கொடுத்த ஜிதேஷ் சர்மா.. லக்னோவை காலி செய்த பெங்களூரு!

விராட் கோலி - ஜிதேஷ் சர்மா

Published: 

28 May 2025 00:00 AM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் 70வது கடைசி லீக் போட்டியில் இன்று அதாவது 2025 மே 27ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru) லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. இதில், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதத்தை பூர்த்தி மொத்தம் 118 ரன்கள் எடுத்தார். அதேபோல், தொடக்க வீரர் மிட்செல் மார்ச் 37 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், துஷாரா, ரோமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.

228 ரன்கள் இலக்கு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் 2 இடங்களுக்கு முன்னேறி முதல் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டுமென்றால், இந்தப் போட்டியில் லக்னோவை தோற்கடிப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 228 ரன்கள் இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிக சிறப்பான தொடக்கத்தை பெற்றது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் பில் சால்ட் இடையே 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. இதற்கிடையில் சால்ட் 30 ரன்கள் எடுத்த ஆட்டமிழக்க, ரஜத் படிதாரும் 14 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை அளித்தார். தொடர்ந்து உள்ளே வந்த லியாம் லிவிங்ஸ்டோன் அடுத்த பந்திலேயே டக் அவுட்டானார்.

அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ந்து, மயங்க் அகர்வால் மற்றும் கோலி இடையே நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகி வந்த நிலையில், கோலி 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். விராட் கோலியின் விக்கெட்டுக்குப் பிறகு, மீதமுள்ள வேலையை மயங்க் அகர்வால் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் வேலையை முடித்தனர். கேப்டன் ஜிதேஷ் சர்மா ஆரம்பம் முதல் லக்னோ பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதனால், ஆட்டத்தின்போக்கு முழுவதும் பெங்களூரு அணி பக்கம் இருந்தது. தொடர்ந்து இவருக்கு பக்கபலமாக மயங்க் அகர்வாலும் விளையாட, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 228 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.

ஜிதேஷ் சர்மா கலக்கல்:

ஜிதேஷ் சர்மா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து, 33 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், மயங்க் அகர்வாலும் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிதேஷ் மற்றும் அகர்வால் இனைந்து 107 ரன்கள் குவித்தனர்.

Related Stories
India vs England 5th Test: வெளியேறிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்..! புது கேப்டனுக்கு கீழ் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு சாதகமா?
World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?
India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?