AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2025 Eliminator: ரிசர்வ் டே இல்லை..! மழை பெய்தால் மும்பைக்கு ஆப்பு.. குஜராத் தகுதிச் சுற்று வாய்ப்பு..?

GT vs MI Weather Forecast: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன. மழையால் போட்டி ரத்தானால், அதிக புள்ளிகள் பெற்ற குஜராத் அடுத்த சுற்றுக்குச் செல்லும். எலிமினேட்டர் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஐபிஎல் பிளேஆஃப் விதிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே உள்ளன.

IPL 2025 Eliminator: ரிசர்வ் டே இல்லை..! மழை பெய்தால் மும்பைக்கு ஆப்பு.. குஜராத் தகுதிச் சுற்று வாய்ப்பு..?
குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 May 2025 11:14 AM IST

ஐபிஎல் 2025ன் (IPL 2025) எலிமினேட்டர் சுற்றில் இன்று குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியும், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும் முல்லன்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் 2025 மே 30ம் தேதியான இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. எனவே, இந்த முறையும் இரு அணிகளும் எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். இந்தநிலையில், ஐபிஎல்லில் பிளேஆஃப் போட்டிகளின் விதிகள் (IPL Playoff Rules) சிறப்பு வாய்ந்தவை. குஜராத்-மும்பை எலிமினேட்டர் போட்டி மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் எந்த அணி வெளியேறும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

வானிலை எப்படி..?

முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2025ன் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியின்போது வானிலையானது மாலையில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், ஈரப்பதம் 43 சதவீதமாகவும் இருக்கும். அதன்படி, மழை பெய்ய வாய்ப்பில்லை. அதேநேரத்தில், இரவு நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் என்றும், வெப்பநிலை இயல்பை விடக் குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மழையால் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்..?

குஜராத் மற்றும் மும்பை இடையிலான போட்டி மழையால் ரத்தானால், மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டரை விளையாடாமலேயே போட்டியில் இருந்து வெளியேறும். ஐபிஎல் விதிகளின்படி, எலிமினேட்டர் போட்டி ரத்து செய்யப்பட்டால், புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அணி அடுத்த சுற்றான குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதி பெறும்.

புள்ளி பட்டியலில் இரு அணிகளும் எப்படி..?

ஐபிஎல் 2025ன் புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது. இதன் அடிப்படையில், மழை அல்லது வேறு காரணங்களால் எலிமினேட்டர் போட்டி ரத்து செய்யப்பட்டால், குஜராத் டைட்டன்ஸ் அணி அதிக புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாவது தகுதிச் சுற்றுக்குள் நுழையும். எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிஃபையர் 1 இல் தோற்கும் அணியை எதிர்கொள்ளும்.

ரிசர்வ் நாள் இல்லையா..?

ஐபிஎல் விதிகளின்படி, எலிமினேட்டர் போட்டிக்கு ரிசர்வ் நாள் எதுவும் வழங்கப்படவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. ஐபிஎல் 2025 இல், இரண்டாவது தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2025 மே 30ம் தேதியான இன்று மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடாமலே வெளியேறும்.

Follow Us