Team India: அடுத்தடுத்து சர்வதேச போட்டி.. எந்தெந்த மாதங்களில் எந்த அணியை இந்தியா எதிர்கொள்ளும்?
India Cricket Team: இந்திய அணி (Indian Cricket Team) ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். அங்கு, இந்திய அணியானது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் போட்டிகளில் விளையாடுவார்கள். இந்தியாவின் 2026-27 உள்நாட்டுப் பருவம் வருகின்ற 2026 செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும். இந்திய அணி 2026ம் ஆண்டு டிசம்பர் வரை அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் (IND vs AFG) வருகின்ற 2026 ஜூன் 6 முதல் 20 வரை ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். புது சண்டிகரில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் போட்டி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் ஒரு பகுதியாக இருக்காது. அதன்பிறகு, இந்திய அணி (Indian Cricket Team) ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். அங்கு, இந்திய அணியானது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் போட்டிகளில் விளையாடுவார்கள். இந்தியாவின் 2026-27 உள்நாட்டுப் பருவம் வருகின்ற 2026 செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும். இந்திய அணி 2026ம் ஆண்டு டிசம்பர் வரை அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
ALSO READ: இந்தியா முதல் இங்கிலாந்து வரை.. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அணிகளின் விவரம்!




ஆப்கானிஸ்தானின் இந்திய சுற்றுப்பயணம்
- 2026 ஜூன் 6-10: ஒற்றை டெஸ்ட் (புது சண்டிகர்)
- 2026 ஜூன் 13: முதல் ஒருநாள் போட்டி (தர்மசாலா)
- 2026 ஜூன் 17: இரண்டாவது ஒருநாள் போட்டி (லக்னோ)
- 2026 ஜூன் 20: மூன்றாவது ஒருநாள் போட்டி (சென்னை)
இந்தியாவின் அயர்லாந்து சுற்றுப்பயணம்
- 2026 ஜூன் 26: முதல் டி20 (பெல்ஃபாஸ்ட்)
- 2026 ஜூன் 28: இரண்டாவது டி20 (பெல்ஃபாஸ்ட்)
இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்
- 2026 ஜூலை 01: முதல் டி20 (செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்)
- 2026 ஜூலை 04: 2வது டி20 (மான்செஸ்டர்)
- 2026 ஜூலை 07: 3வது டி20 (நாட்டிங்ஹாம்)
- 2026 ஜூலை 09: 4வது டி20 (பிரிஸ்டல்)
- 2026 ஜூலை 11: ஐந்தாவது டி20 (சவுத்தாம்ப்டன்)
- 2026 ஜூலை 14: முதல் ஒருநாள் போட்டி (பர்மிங்ஹாம்)
- 2026 ஜூலை 16: இரண்டாவது ஒருநாள் போட்டி (கார்டிஃப்)
- 2026 ஜூலை 19: மூன்றாவது ஒருநாள் போட்டி (லார்ட்ஸ், லண்டன்)
இந்தியாவின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்
- 2026 ஜூலை 26: முதல் டி20 (ஹராரே)
- 2026 ஜூலை 25: இரண்டாவது டி20 (ஹராரே)
- 2020 ஜூலை 26: 3வது டி20 (ஹராரே)
ஆகஸ்ட் 2026
- இலங்கைக்கான இந்திய சுற்றுப்பயணம் (2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள்) – தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2026
- 2026 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 03 வரை: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026, ஜப்பான் (டி20 வடிவம்)
- 2026 செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 02 வரை: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் (3 போட்டிகள்)
- 2026 அக்டோபர் 06 முதல் 17 வரை: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் டி20 (5 போட்டிகள்)
ALSO READ: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 டி20 போட்டி.. சொந்த மண்ணில் விருந்தினராக விளையாடப்போகும் இந்திய அணி!
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை
- 2026 செப்டம்பர் 13: இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் டி20 (டெல்லி)
- 2026 செப்டம்பர் 16: இந்தியா – ஆப்கானிஸ்தான் 2வது டி20 (டெல்லி)
- 2026 செப்டம்பர் 19: இந்தியா – ஆப்கானிஸ்தான் 3வது டி20 (டெல்லி)