AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs ZIM W 3rd T20 Highlights : ஜிம்பாப்வே மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்த இந்திய மகளிர் அணி!

IND-W vs ZIM-W 3rd T20 Live Score Updates in Tamil : ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Oct 2026 23:10 PM IST
Share
IND W vs ZIM W 3rd T20 Highlights : ஜிம்பாப்வே மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்த இந்திய மகளிர் அணி!
Indw Vs Zimw

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நடைபெறுகிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் செயல்பாடுகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டி அக்டோபர் 20, 2026  ராய்பூரில் இந்திய நேரப்படி சரியாக 7 மணிக்கு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜிம்பாப்வே அணி உள்ளது. இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியின் டாஸ் முடிவு, பிளேயிங் லெவன், ஸ்கோர், விக்கெட்டுகள், பவுண்டரிகள், சிக்ஸர்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் போட்டியின் முடிவு உள்ளிட்ட அனைத்து அப்டேட்களையும் இந்த பதிவில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Oct 2026 10:17 PM (IST)

    India vs Zimbabwe Women 3rd T20 Live: ஜிம்பாப்வே மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்த இந்திய மகளிர்

    ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  • 20 Oct 2026 10:06 PM (IST)

    India vs Zimbabwe Women 3rd T20 Live: 18 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே.. வெற்றியை நோக்கி இந்திய மகளிர்..!

    ஜிம்பாப்வே மகளிர் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • 20 Oct 2026 09:29 PM (IST)

    India vs Zimbabwe Women 3rd T20 Live: 9 ஓவர்களில் 57 ரன்கள்.. போராடும் ஜிம்பாப்வே மகளிர்!

    217 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் ஜிம்பாப்வே மகளிர் அணி 9 ஓவர்கள் முடிவில் 57 ரன்கள் எடுத்துள்ளது.

  • 20 Oct 2026 09:04 PM (IST)

    India vs Zimbabwe Women 3rd T20 Live: 2 ஓவர்களில் 18 ரன்கள்.. 2 விக்கெட்களை இழந்த ஜிம்பாப்வே..

    இந்திய மகளிர் அணி கொடுத்த 217 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வரும் ஜிம்பாப்வே மகளிர் அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது.

  • 20 Oct 2026 08:35 PM (IST)

    India vs Zimbabwe Women 3rd T20 Live: இந்திய அணி அபார பேட்டிங்.. ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு 217 ரன்கள் இலக்கு!

    ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபாரமாக பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.

  • 20 Oct 2026 08:20 PM (IST)

    India vs Zimbabwe Women 3rd T20 Live : 25 பந்துகளில் அரைசதம்.. கலக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர்!

    ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் வெறும் 24 பந்துகளில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

  • 20 Oct 2026 08:04 PM (IST)

    India vs Zimbabwe Women 3rd T20 Live : அரைசதம் அடித்து ஆடும் ஷஃபாலி.. 13 ஓவர்களில் 126 ரன்கள்..!

    ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். இதன்காரணமாக, இந்திய மகளிர் அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

  • 20 Oct 2026 07:45 PM (IST)

    India vs Zimbabwe Women 3rd T20 Live : 9 ஓவர்களில் 79 ரன்கள்.. நிதானமாக ஆடும் இந்திய மகளிர்!

    9 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

  • 20 Oct 2026 07:26 PM (IST)

    India vs Zimbabwe Women 3rd T20 Live : 5 ஓவர்களில் 50 ரன்கள்.. அசத்தும் இந்திய மகளிர் அணி!

    ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிராக 3வது டி20 போட்டியில் விளையாடி வரும் இந்திய மகளிர் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது.

  • 20 Oct 2026 07:15 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: 3 ஓவர்கள் முடிவு.. 27 ரன்கள் எடுத்துள்ள இந்திய மகளிர்!

    ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய மகளிர் அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது.

  • 20 Oct 2026 06:48 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: ஜிம்பாப்வே மகளிர் அணியின் பிளேயிங் லெவன்!

    கெலிஸ் நத்லோவ், பிரியமான பிசா, சிப்போ முகேரி-திரிபனோ, ஷார்னே மேயர்ஸ், ஜோசபின் என்கோமோ (கேப்டன்), நியாஷா குவான்சுரா, மாடஸ்டர் முபச்சிக்வா(விக்கெட் கீப்பர்), குட்சாய் சிகோரா, லோரின் ஃபிரி, டெண்டாய் மகுஷா, நோம்வெலோ சிபாண்டா

  • 20 Oct 2026 06:37 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: இந்திய மகளிர் அணியின் பிளேயிங் லெவன்..!

    ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா(கேப்டன்), அனுஷ்கா ஷர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர், நிகி பிரசாத், ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, நந்தனி ஷர்மா, கிராந்தி கவுட், பிரேமா ராவத்

  • 20 Oct 2026 06:34 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: டாஸ் வென்ற இந்திய அணி.. முதலில் பேட்டிங் செய்ய முடிவு..!

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது.

  • 20 Oct 2026 06:25 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: இந்தியாவில் இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் அணியின் 3வது டி20ஐ போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?

    இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் டி20ஐ தொடரின் நேரடி ஒளிபரப்பு இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம்.

  • 20 Oct 2026 05:00 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: ஜிம்பாப்வேயின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்

    கெல்லிஸ் நத்லோவ், பிரியமான பிசா, மாடஸ்டர் முபச்சிக்வா (விக்கெட் கீப்பர்), ஷார்ன் மியர்ஸ், மைக்கேல் மவுங்கா, சிப்போ முகேரி-திரிபானோ, நியாஷா குவாஞ்சுரா, ஃபிரான்சிஸ்கா சிப்பரே, ஓலியாண்டர் சாரே, ஜோசபின் நகோமோ (கேப்டன்) மற்றும் டெண்டாய் மகுஷா.

  • 20 Oct 2026 04:44 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: இந்தியாவின் உத்தேச ஆடும் 11 பேர் கொண்ட அணி

    ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷெபாலி வர்மா, அனுஷ்கா சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர், நிக்கி பிரசாத், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சரணி, நந்தினி சர்மா மற்றும் கிராந்தி கவுர்.

  • 20 Oct 2026 04:00 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: ராய்ப்பூர் பிட்ச் ரிப்போர்ட்!

    ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் போட்டி, பேட்டிங்கிற்குச் சாதகமான சூழலை வழங்கியது. ஆடுகளம் நன்றாகத் தயாராகி வந்ததால், பேட்ஸ்மேன்கள் தங்களது ஷாட்களை ஆட முடிந்தது. இருப்பினும், ஆடுகளத்தின் உண்மையான தன்மை போட்டியின் போதுதான் தெரியவரும். ஒரு மாலை நேரப் போட்டியில், பனிப்பொழிவு இருந்தால், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது சவாலாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச முடிவு செய்யலாம்.

  • 20 Oct 2026 03:13 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஜிம்பாப்வே மகளிர்..?

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தொடக்க ஆட்டங்கள் இரண்டிலும் வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் வெல்ல முடியாத முன்னிலையைப் பெற்றுள்ளது. இது இந்த வடிவத்தில் அவர்களின் தொடர்ச்சியான 10வது வெற்றியாகும். மறுபுறம், ஜிம்பாப்வே இந்த ஆண்டு ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் கூட இன்னும் வெற்றி பெறவில்லை. ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு 20 போட்டிகளில் விளையாடி, இந்தியாவுக்கு எதிரான இரண்டு தோல்விகள் உட்பட அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.

  • 20 Oct 2026 03:11 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: ஜிம்பாப்வே மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய மகளிர்?

    ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெறும் நோக்குடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இன்று அதாவது 2026 அக்டோபர் 20ம் தேதி களமிறங்குகிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் முதல் 2 டி20 போட்டியில் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்து, தொடரில் 2-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றது.

Published On - Oct 20,2026 2:30 PM

Follow Us