IND vs SA 4th T20: கடும் பனி.. டாஸ் போட தாமதம்.. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4வது டி20 ரத்து..!
IND vs SA 4th T20 Match Abandoned: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி கடுமையான பனி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 ஓவர்கள் கொண்ட போட்டிக்கான கட்-ஆஃப் நேரம் இரவு 9:46 ஆக இருந்தநிலையில், கடும் பனி காரணமாக நடுவர்கள் அதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு தங்கள் இறுதி முடிவை எடுத்தனர்.
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி (IND vs SA 4th T20) கடுமையான பனி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, லக்னோவில் உள்ள எகானா மைதானத்தில் டாஸ் நடைபெறுவதை மூடுபனி தடுத்தது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா (Indian Cricket team) 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு போட்டி தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் மோசமான வானிலை காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதற்கு நடுவர்கள் இரண்டரை மணி நேரம் காத்திருந்தனர்.
ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி.. வெற்றியுடன் 5 முக்கிய சாதனைகளை படைத்த இந்திய அணி!




தொடர்ந்து, 5 ஓவர்கள் கொண்ட போட்டிக்கான கட்-ஆஃப் நேரம் இரவு 9:46 ஆக இருந்தநிலையில், கடும் பனி காரணமாக நடுவர்கள் அதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு தங்கள் இறுதி முடிவை எடுத்தனர். போட்டி நடைபெறும் நாளான இன்று காலை அதாவது 2025 டிசம்பர் 17ம் தேதி லக்னோவில் பகலில் வானிலை சீரான வெயிலுடன் காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நெருங்க நெருங்க, வானம் அடர்த்தியான மூடுபனியால் சூழப்பட்டது. கடந்த சில நாட்களாக லக்னோவில் அதிக அளவு மூடுபனி இருப்பதால், பள்ளிகள் திறக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கமாக 8 முதல் 8.30 மணிக்கு தொடங்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் காலை 9 மணிக்குத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரை இழக்குமா இந்திய அணி..?
𝐔𝐩𝐝𝐚𝐭𝐞: The fourth India-South Africa T20I is called off due to excessive fog.#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/QWDUVFxVlP
— BCCI (@BCCI) December 17, 2025
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா இனி இழக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் தொடர் 2-2 என சமநிலையில் முடியும். தற்போது, இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதேநேரத்தில், இந்திய அணி கடைசி டி20 போட்டியில் வெற்றிபெற்றால் 3-1 என்ற கணக்கில் வெல்லும். இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
ALSO READ: ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸ்ர்கள்.. டாப் 2 பட்டியலில் ரோஹித், கோலி!
தொடரின் முதல் டி20 போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இரண்டாவது போட்டியில், இந்திய பேட்டிங் தோல்வியடைந்தது, 214 ரன்கள் என்ற இலக்கை அடையத் தவறியது. மூன்றாவது டி20 போட்டியில், இந்தியா வலுவான மறுபிரவேசம் செய்து ஆப்பிரிக்க அணியை 117 ரன்களுக்குள் சுருட்டியது. அந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது.