Shreyas Iyer: அதிவேகமாக எடை குறைந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. பிசிசிஐ சிறப்பு கவனம்.. இந்திய அணிக்காக விளையாடுவாரா?
Shreyas Iyer lost 6 kg Weight Due to Injury: 2026ம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 2026ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதிகளில் நடைபெறும் விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது உடற்தகுதி குறித்த புதிய அப்டேட் வெளிவந்த பிறகு, இப்போது விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவது அவருக்கு மிகவும் கடினமாகத் தெரிகிறது.

ஷ்ரேயாஸ் ஐயர்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான (IND vs NZ) ஒருநாள் தொடர் வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை தவறவிட்ட இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) மீண்டும் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்தநிலையில், இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதற்கு பிசிசிஐயின் சிறப்பு மையத்திலிருந்து இன்னும் அனுமதி பெறவில்லை.
ALSO READ: கவுதம் கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன்.. டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளர்? பிசிசிஐ அப்டேட்!
எடை குறைந்த ஷ்ரேயாஸ் ஐயர்:
நேற்று அதாவது 2025ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதிக்குள் ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால், பிசிசிஐ நடத்திய சோதனைகளில் ஷ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதியற்றவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்போது ஷ்ரேயாஸ் ஐயர் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது சிறப்பு மையத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குணமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் எந்த பிரச்சனையும் இல்லாமல் பேட்டிங் செய்தாலும், நாளுக்கு நாள் குறிப்பிடத்தக்க எடை குறைவு பிரச்சனை சந்தித்து வருவதாகவும், வலிமை அளவுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அதாவது 2026 ஜனவரி முதல் வாரத்தில் அவரது உடல் தகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் சுமார் 6 கிலோ எடை குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும், தசை நிறை குறைந்ததால் அவரது வலிமை குறைந்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் உடல்நலம்:
🚨Shreyas Iyer Bad News🚨
A BCCI official said that Shreyas Iyer is doubtful for NZ ODIs because though he has started batting practice, he lost around 6 kgs after the injury.
This resulted in a drop in his muscle mass which could affect his optimal strength.#ShreyasIyer… pic.twitter.com/0YVMJKnKYS— Rinshupatel🇮🇳 (@Rinshupatel93) December 31, 2025
டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டிய பிசிசிஐ வட்டாரம், ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணிக்கு ஒரு முக்கியமான வீரர் என்பதால், மருத்துவக் குழு அவரைப் பற்றி அலட்சியமாக இருக்காது என்றும், அவரது முழு உடற்தகுதியே தற்போது முதன்மையானது என்றும் தெரிவித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நிர்வாகத்திற்கும் தேர்வாளர்களுக்கும் இடையே விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
ALSO READ: 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. டெஸ்டில் ஓய்வை அறிவித்த எம்.எஸ்.தோனி! இந்திய ரசிகர்கள் ஷாக்!
2026ம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 2026ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதிகளில் நடைபெறும் விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது உடற்தகுதி குறித்த புதிய அப்டேட் வெளிவந்த பிறகு, இப்போது விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவது அவருக்கு மிகவும் கடினமாகத் தெரிகிறது.