IND Vs NZ Series 2026: இந்தியா- நியூசிலாந்து இடையிலான தொடர் எப்போது..? எத்தனை போட்டிகளில் விளையாடுகிறது?
IND Vs NZ Full Schedule 2026: வருகின்ற 2026ம் ஆண்டு புத்தாண்டில் நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி தனது முதல் தொடரை சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்த சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர் என மொத்தம் 8 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடருடன் 2025ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை முடித்து கொண்டது. இதனை தொடர்ந்து, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வருகின்ற 2026ம் ஆண்டு மீண்டும் களம் காண்கிறது. வருகின்ற 2026ம் ஆண்டு புத்தாண்டில் நியூசிலாந்திற்கு (India vs Newzealand Series) எதிராக இந்திய அணி தனது முதல் தொடரை சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்த சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர் என மொத்தம் 8 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் அடங்கும். இந்தநிலையில், 2026ம் ஆண்டுக்கான இந்தியா – நியூசிலாந்து இடையிலான தொடரின் அட்டவணையை முழுமையாக தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியை மாற்றலாமா? ஐசிசி கூறுவது என்ன?




இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர்:
இந்தியா – நியூசிலாந்து இடையிலான தொடரின் முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி வதோதராவில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி ராஜ்கோட்டிலும், 3வது ஒருநாள் போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி இந்தோரிலும் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான அனைத்து ஒருநாள் போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது.
டி20 போட்டி எப்போது தொடக்கம்..?
ஒருநாள் தொடருக்குப் பிறகு, இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி நாக்பூரில் நடைபெறும். அதேநேரத்தில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி ராய்ப்பூரிலும், 3வது டி20 போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி குவஹாத்தியிலும், நான்காவது டி20 போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி விசாகப்பட்டினத்திலும், ஐந்தாவது டி20 போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது. இந்த 5 டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும்.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான ஒருநாள் ஹெட் டூ ஹெட் விவரம்:
இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில், அதிகபட்சமாக 62 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், நியூசிலாந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஏழு போட்டிகள் டிராவிலும், ஒரு போட்டி டையில் முடிந்தது. ஒருநாள் தொடருக்கான அணிகளை இந்தியாவும் நியூசிலாந்தும் இன்னும் அறிவிக்கவில்லை.
ALSO READ: அன்றைய நாளில் ஓய்வு முடிவை யோசித்தேன்.. பகீர் கிளப்பிய ரோஹித் சர்மா! விரைவில் ஓய்வா?
இந்தியா – நியூசிலாந்து இடையிலான டி20 ஹெட் டூ ஹெட் விவரம்:
The same squad will play the @IDFCFIRSTBank 5-match T20I series against New Zealand in January.#TeamIndia | #INDvNZ https://t.co/o94Vdqo8j5
— BCCI (@BCCI) December 20, 2025
இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே இதுவரை 25 டி20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. இதிலும், இந்திய அணி அதிகபட்சமாக 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு டி20 சர்வதேச போட்டி டையில் முடிந்தது. டி20 சர்வதேச தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இந்தியா அறிவித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையிலும் விளையாடும். இருப்பினும், நியூசிலாந்து இன்னும் தனது அணியை அறிவிக்கவில்லை.