Shubman Gill’s Angry: கடைசி நேரத்தில் நேரத்தை வீணடித்த க்ரௌலி.. கடுப்பாகி வாக்குவாதம் செய்த சுப்மன் கில்..!

India vs England Test: இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில், ஜாக் க்ரௌலியின் நேர விரயம் செய்ததால் சுப்மன் கில் கடுமையாக கோபமடைந்தார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலானது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்தது.

Shubman Gills Angry: கடைசி நேரத்தில் நேரத்தை வீணடித்த க்ரௌலி.. கடுப்பாகி வாக்குவாதம் செய்த சுப்மன் கில்..!

சுப்மன் கில்

Published: 

13 Jul 2025 11:13 AM

இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி (India – Enland 3rd Test) லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்டின் 3வது நாளான நேற்று (2025 ஜூலை 12) காரசாரமான நிகழ்வுகள் நிறைய நடந்தது. 3வது நாளில் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) வீசிய கடைசி ஓவரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ரௌலி நேரத்தை கடக்க சில விஷயங்களை மேற்கொண்டார். இப்படி செய்தது இந்திய வீரர்களிடையே கடும் கோபத்தை எழுப்பியது. அதிலும் குறிப்பாக இந்திய கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) ஆத்திரமடைந்து க்ரௌலியிடம் சென்று விரலை காட்டி ஏதோ பேசினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜாக் க்ரௌலி மீது சுப்மன் கில் ஏன் கோபப்பட்டார்?

இந்திய கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் நாள் ஆட்டம் முடிவதற்கு முன்பு, இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்பிறகு, இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸ் தொடங்கியது. அன்றைய ஆட்டம் முடிவடைய சிறிது நேரம் மட்டுமே இருந்தது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் ஓவரை அன்றைய நாளின் கடைசி ஓவராக இங்கிலாந்து மாற்ற விரும்பியது.

ALSO READ: லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டு என்றால் என்ன..? இது ஏன் அவ்வளவு முக்கியம்..?

பும்ரா வீசிய முதல் ஓவரை ஜாக் க்ரௌலி நிறைய நேரத்தை வீணடிக்க முயற்சி மேற்கொண்டார். பும்ரா வீசிய 5வது பந்தின் ஒரு பந்தை பேட்டால் தடுக்க ஜாக் க்ரௌலி, அவரது கையில் பட்டதுபோல் நடித்தார். இதனை பார்த்த சுப்மன் கில் கோபமடைந்தார். தொடர்ந்து, இந்திய வீரர்கள அனைவரும் ஜாக் க்ரௌலியை சுற்றி கேலி செய்தனர். அதன்பிறகு, சுப்மன் கில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ரௌலியிடம் சென்று கை நீட்டி கோபமாக ஏதோ சொன்னார்.

கில் வாக்குவாதம்:

இதற்குப் பிறகு இந்திய அணி மேலும் ஒரு ஓவரை வீச விரும்பியது, ஆனால் விக்கெட்டுகளை இழந்துவிடுவோமோ என்ற பயம் காரணமாக இங்கிலாந்து அணி இதை விரும்பவில்லை. இதனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் பும்ராவும் பேட்ஸ்மேனுடன் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

ALSO READ: லார்ட்ஸில் 2வது சதம்.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்!

போட்டியில் நடந்தது என்ன..?

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 104 ரன்கள் எடுக்க, அதேநேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், கே.எல். ராகுல் சதம் (100), ரிஷப் பண்ட் (74) மற்றும் ரவீந்திர ஜடேஜா (72) ஆகியோர் ரன்களை குவிக்க, இந்திய அணியு, 387 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளின் ஸ்கோரும் சமமாக இருந்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் தற்போது 2/0 ஆக உள்ளது.