India vs England Test: வினோ மன்கட்டின் 73 ஆண்டு கால லார்ட்ஸ் சாதனை.. தகர்ப்பார்களா இந்திய இளம் பேட்ஸ்மேன்கள்..?

Vinoo Mankad's Lords Record: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், 73 ஆண்டுகளுக்கு முன்பு வினோ மன்காட் படைத்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. சச்சின், கோலி போன்ற ஜாம்பவான்களாலும் முறியடிக்க முடியாத இந்த சாதனை, 1952 இல் இங்கிலாந்துக்கு எதிராக அவர் எடுத்த 184 ரன்கள். இந்திய அணியின் தற்போதைய லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

India vs England Test: வினோ மன்கட்டின் 73 ஆண்டு கால லார்ட்ஸ் சாதனை.. தகர்ப்பார்களா இந்திய இளம் பேட்ஸ்மேன்கள்..?

வினோ மன்கட் - சுப்மன் கில்

Published: 

12 Jul 2025 12:36 PM

புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான (India – England Test Series) 3வது டெஸ்டின் 2வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) சிறப்பாக விளையாடிய 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்திய அணியில் கே.எல்.ராகுல் (KL Rahul) அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி 145 ரன்கள் எடுத்ததன்மூலம், இங்கிலாந்து அணியை விட 242 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இந்தநிலையில், ஒரு இந்திய சாதனை லார்ட்ஸில் 73 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளது. அதை இன்று வரை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனாலும் முறியடிக்க முடியவில்லை. அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

என்ன சாதனை இது..?

லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 73 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் வினோ மன்கட் லார்ட்ஸில் செய்த சாதனை இன்னும் அப்படியே உள்ளது. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களால் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை. கடந்த 1952 ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் வினோ மன்கட் வரலாறு படைத்தார். லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் எந்த இந்திய பேட்ஸ்மேனும் எடுத்த மிகப்பெரிய இன்னிங்ஸ் என்ற சாதனை இன்னும் மன்கட் பெயரில் அப்படியே உள்ளது.

ALSO READ: கபில் தேவின் சாதனையை முறியடித்த பும்ரா – இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட் 

இந்த நேரத்தில், வினோ மன்கட் 184 ரன்கள் எடுத்து வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை விளையாடினார். இதற்காக, வினோ மன்கட் வெறும் 270 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்னிங்ஸில், வினோ மன்கட்  இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை அடித்தார். வினோ மன்கட்-க்குப் பிறகு, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள் இந்தியாவுக்காக பல சாதனைகளைப் படைத்து முறியடித்தனர். ஆனால் அவர்களால் கூட இந்த 73 ஆண்டுகால சாதனையை முறியடிக்க முடியவில்லை.

வினோ மன்கட்:

வினோ மன்கட் இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.  வினோ மன்கட் இந்தியாவுக்காக இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 2109 ரன்களும், பந்துவீச்சில் 162 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ALSO READ: இதுதான் பேஸ்பால் கிரிக்கெட்டா..? ஜோ ரூட்டை வம்பிழுத்த சிராஜ்..!

இப்போது கடந்த 2025 ஜூலை 10ம் தேதி முதல் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.