Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli Century: 53வது ஒருநாள் சதம்.. 84வது சர்வதேச சதம்.. மிரட்டும் விராட் கோலி..!

Virat Kohli's 53rd ODI Hundred: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் இன்னிங்ஸ்களில் 11 முறை சதம் அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இவருக்குப் பிறகு தொடர்ச்சியான ஒருநாள் இன்னிங்ஸ்களில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸ் ஆறு முறை சதம் அடித்துள்ளார்.

Virat Kohli Century: 53வது ஒருநாள் சதம்.. 84வது சர்வதேச சதம்.. மிரட்டும் விராட் கோலி..!
விராட் கோலிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2025 17:29 PM IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா (IND vs SA) இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி (Virat Kohli) தனது 53வது ஒருநாள் சதத்தை அடித்து புதிய வரலாறு படைத்தார். ராய்ப்பூரில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி இந்த தொடரில் தொடர்ச்சியாக 2வது சதம் அடித்தார். இது விராட் கோலியின் 84வது சர்வதேச சதமாகும். முன்னதாக, ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததைத் தொடர்ந்து, ராய்ப்பூரில் நடந்த ஒருநாள் போட்டியிலும் கோலி சதம் அடித்தார். இதுமட்டுமின்றி, விராட் கோலி தொடர்ந்து மூன்றாவது போட்டியில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: தேர்வாளருடன் பேசிய கோலி.. தனியாக உட்கார்ந்திருந்த கம்பீர்.. இந்திய அணிக்குள் சிக்கலா?

விராட் கோலி படைத்த சாதனைகள்:

  • ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் இன்னிங்ஸ்களில் 11 முறை சதம் அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இவருக்குப் பிறகு தொடர்ச்சியான ஒருநாள் இன்னிங்ஸ்களில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸ் ஆறு முறை சதம் அடித்துள்ளார்.
  • விராட் கோலி தனது கடைசி 3 இன்னிங்ஸ்களில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பான சாதனையை பதிவு செய்துள்ளார். அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி 3 ஒருநாள் இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்துள்ளார். முன்னதாக, 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கோலி ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். தற்போதைய தொடரின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்துள்ளார்.
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலியின் ஏழாவது சதமாகும். இது ஒருநாள் வரலாற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒருவரின் அதிகபட்ச சதமாகும்.

ALSO READ: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை! 20 முறை தொடர்ந்து டாஸ் இழந்த இந்திய அணி!

  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 31 இன்னிங்ஸ்களில் 1741 ரன்கள் எடுத்துள்ளார். இதில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கோலி  7 சதங்கள் மற்றும் 7 அரைசதங்களை அடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் விராட் கோலி ஆவார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1255 ரன்கள் எடுத்து டேவிட் வார்னர் 2வது இடத்தில் உள்ளார்.