T20 WorldCup 2026: டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்.. கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு!

IND vs PAK T20 World Cup 2026: வரவிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும். பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒன்றுக்கொன்று தங்கள் நாடுகளில் எதிர்த்து விளையாடுவதை நிறுத்திவிட்டனர்.

T20 WorldCup 2026: டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்.. கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இந்தியா - பாகிஸ்தான்

Published: 

30 Jan 2026 11:24 AM

 IST

2026 டி20 உலகக் கோப்பை (T20 WorldCup 2026) வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் (India vs Pakistan) இடையிலான போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து, இந்த போட்டிக்கான பாதுகாப்பில் இலங்கை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. போட்டியின் போது எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக போட்டிக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார தெரிவித்தார்.

ALSO READ: எம்.எஸ்.தோனி முதல் ரோஹித் சர்மா வரை.. 2 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற கதை!

இலங்கை விளையாட்டு அமைச்சர் கூறியது என்ன..?


AFP செய்தி நிறுவனத்திடம் பேசிய விளையாட்டு அமைச்சர் சுனில் குமார, ”இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இரு அணிகளையும் பாதுகாக்க சிறப்பு கமாண்டோ பிரிவுகள் நிறுத்தப்படும். விமான நிலையத்தில் வருகை முதல் புறப்பாடு வரை முழுமையான பாதுகாப்பு, இரு அணிகளும் வழங்கப்படும். அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதிலிருந்து தங்கள் விமானத்திற்குத் திரும்பும் வரை, கையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இரு அணி வீரர்களை பாதுகாப்பார்கள்” என்று தெரிவித்தார்.

வரவிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும். பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒன்றுக்கொன்று தங்கள் நாடுகளில் எதிர்த்து விளையாடுவதை நிறுத்திவிட்டனர். கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு இருதரப்பு தொடரில் விலையாடுவதற்கு செல்லவில்லை. அதேநேரத்தில், பாகிஸ்தான் அணி கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்தியாவில் இரு தரப்பு தொடரில் பங்கேற்கவில்லை. எனவே, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறும். இதுமட்டுமின்றி, பாகிஸ்தான் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடும்.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் சாதனை:

டி20 உலகக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ஏழு போட்டிகளில் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ALSO READ: வாஷிங்டன் சுந்தருக்காக காத்திருக்கும் இந்திய அணி.. உடற்தகுதி சோதனை எப்போது?

இந்தியா vs பாகிஸ்தான் ஒட்டுமொத்த டி20 போட்டி நேருக்கு நேர்:

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒட்டுமொத்த டி20 சர்வதேச போட்டிகளில், இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 16 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 13 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ
டிரைவிங் லைசென்ஸ் விதிமுறைகளில் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்
லேண்டடிங் கியரை திறக்க முடியாத நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நாசா விமானம்
40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்