IND W vs NZ W: நியூசிலாந்திற்கு எதிரான செய் அல்லது செத்துமடி போட்டி.. என்ன செய்ய போகிறது இந்திய அணி?
India W vs New Zealand W Playing 11: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, தொடர்ச்சியான 3 தோல்விகளில் இருந்து பெற்ற பாடத்தை கற்று வெற்றிக்கு திரும்ப வேண்டும். சொந்த மண்ணில் இந்தியா நியூசிலாந்தை தோற்கடித்தால், அரையிறுதிக்கு முன்னேறும் நான்காவது அணியாக மாறும்.

2025 மகளிர் உலகக் கோப்பை (ICC Womens Cricket World Cup) கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே ஒரு அரையிறுதி இடம் மட்டுமே மீதமுள்ள நிலையில், நாளை அதாவது 2025 அக்டோபர் 22ம் தேதி DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து (Ind W – NZ W) இடையேயான போட்டி ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெறவில்லை என்றால், உலகக் கோப்பை வெல்லும் கனவை இந்த முறை மறக்க வேண்டியதுதான். முதல் 2 போட்டிகளில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ALSO READ: தொடக்க வீரராக இளம் வீரரை தயார் படுத்தும் ரோஹித்.. கம்பீர் கட்டாயமா..?விரைவில் ஓய்வா?
அரையிறுதிக்கு இந்திய அணி செல்லுமா..?
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஏற்கனவே 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இப்போது, நான்காவது மற்றும் கடைசி அணியாக உள்ளே செல்ல இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு அணிகளும் நான்கு புள்ளிகளுடன் சமமாக உள்ளன. இருப்பினும், நிகர ரன் ரேட் அடிப்படையில், இந்தியா நியூசிலாந்தை விட முன்னணியில் இருந்து, புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.




ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, தொடர்ச்சியான 3 தோல்விகளில் இருந்து பெற்ற பாடத்தை கற்று வெற்றிக்கு திரும்ப வேண்டும். சொந்த மண்ணில் இந்தியா நியூசிலாந்தை தோற்கடித்தால், அரையிறுதிக்கு முன்னேறும் நான்காவது அணியாக மாறும். ஆனால் இந்திய அணி தோற்றால், இங்கிலாந்து உடனான அடுத்த மோதலில் நியூசிலாந்து அணியின் தோல்விக்காக இந்திய அணி பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதும் முக்கியம்.
ALSO READ: 50 ஓவர்களும் சுழற்பந்து வீச்சு! வங்கதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் சம்பவம்!
இரு அணிகளின் முழு விவரம்:
இந்திய மகளிர் அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர், சினே ராணா, தீப்தி சர்மா, கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், ஸ்ரீ சரணி, ராதா யாதவ் மற்றும் உமா சேத்ரி.
நியூசிலாந்து மகளிர் அணி:
சோஃபி டெவின் (கேப்டன்), இசபெல்லா கேஜ் (விக்கெட் கீப்பர்), மேடி கிரீன், பாலி இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பெல்லா ஜேம்ஸ், ஜார்ஜியா பிளைமர், சுசி பேட்ஸ், ப்ரூக் ஹாலிடே, அமெலியா கெர், ஈடன் கார்சன், ப்ரீ எலிங், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ஹன்னா ரோவ் மற்றும் லியா தஹுஹு.