Womens World Cup 2025: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு எப்படி செல்லும்..? சமன்பாடு என்ன..?
Indian Womens Cricket Team: இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி, வலுவாக தொடங்கியது. ஆனால் பின்னர் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்விகளைச் சந்தித்தது. இந்தியாவுக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் மீதமுள்ளன.

2025ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி (ICC Womens World Cup 2025) இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று அதாவது 2025 அக்டோபர் 18ம் தேதி வரையிலான நிலவரப்படி, இதுவரை 19 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன் அடிப்படையில், லீக் ஸ்டேஜ் போட்டிகளில் 9 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இதில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள 6 அணிகள் மீதமுள்ள 2 இடங்களுக்காக கடுமையாக போட்டியிட இருக்கின்றன. இந்தநிலையில், இந்திய அணி (Indian Womens Cricket Team) அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்..? ஒரு போட்டியில் தோற்றால் என்ன நடக்கும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் இந்திய மகளிர் அணி..? பலம் காட்டுமா இங்கிலாந்து அணி?




யார் முதலிடம்..?
Ahead of their clash against England, the Indian team visited the newly established Madhya Pradesh Cricket Association museum 👌
How to watch #CWC25 📺 https://t.co/ULC9AuHQ4P pic.twitter.com/739dKBJUGR
— ICC (@ICC) October 18, 2025
பலம் மிக்க ஆஸ்திரேலிய அணி இதுவரை 9 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளன. இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளன. நியூசிலாந்து அணியும் 4 புள்ளிகளை பெற்றிருந்தாலும் இந்தியாவை குறைந்த ரன் ரேட்டை பெற்றுள்ளதால் 5வது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன.
இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி, வலுவாக தொடங்கியது. ஆனால் பின்னர் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்விகளைச் சந்தித்தது. இந்தியாவுக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் மீதமுள்ளன. 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால், அது நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். இதன்மூலம், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுவதைத் தவிர்க்கலாம். இந்தியா இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றாலும், 8 புள்ளிகளுடன் அரையிறுதி இடத்திற்கு வலுவான போட்டியாளராக இருக்கும்.
ALSO READ: சொற்ப ரன்களில் சோகம்… அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரோஹித் – கோலி ஏமாற்றம்!
இந்தியா ஒரே ஒரு போட்டியில் வென்றால் என்ன செய்வது?
இந்திய மகளிர் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வென்றால், அது மற்ற முடிவுகளை நம்பியிருக்க வேண்டும். இந்தியா நியூசிலாந்தை மட்டும் தோற்கடித்தால், வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானை விட முன்னேற அதன் நிகர ரன் ரேட் (NRR) அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தியா வங்கதேசத்தை மட்டும் தோற்கடித்தால், இங்கிலாந்து நியூசிலாந்தை தோற்கடிக்கும் என்று நம்ப வேண்டும்.