India Women vs England Women: கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் இந்திய மகளிர் அணி..? பலம் காட்டுமா இங்கிலாந்து அணி?
IND W vs ENG W World Cup Match: தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளைச் சந்தித்த நிலையில் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேற 2025 அக்டோபர் 19ம் தேதியான இன்று நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் (ICC Womens World Cup 2025)
அற்புதமான தொடக்கத்திற்குப் பிறகு, இந்திய மகளிர் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி (Indian Womens Cricket Team) தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளைச் சந்தித்த நிலையில் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேற 2025 அக்டோபர் 19ம் தேதியான இன்று நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும். இங்கிலாந்து மகளிர் அணி இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியடையவில்லை, தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் 20வது போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2025 அக்டோபர் 19ம் தேதியான இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள இந்திய அணி இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். இந்திய அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் இங்கிலாந்து மகளிர் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் தோல்வியடையவில்லை, மேலும் தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர முயற்சிக்கும்.




இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 79 போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில் இங்கிலாந்து 41 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் இந்தியா 36 போட்டிகளில் வென்றுள்ளது. இருப்பினும், கடந்த 5 போட்டிகளில் இந்தியா நான்கில் வென்றுள்ளது. இங்கிலாந்து ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்தூர் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி சரியாக பயன்படுத்திகொள்ள முயற்சிக்கும்.
இரு அணிகளின் விவரம்:
இந்தியா:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா சேத்ரி, ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட்.
இங்கிலாந்து:
நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), எம் ஆர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், சாரா க்ளென், ஆமி ஜோன்ஸ், ஹீதர் நைட், எம்மா லாம்ப், லின்சி ஸ்மித், டேனி வயட்-ஹாட்ஜ்.
ALSO READ: 2030 காமன்வெல்த் போட்டியை நடத்தும் அகமதாபாத்.. பதிவு போட்டு உறுதி செய்த அமித் ஷா!
இந்தியா-இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டியை எங்கு பார்க்கலாம்..?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பெண்கள் உலகக் கோப்பைக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸின் தனித்தனி சேனல்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1/HD மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்/HD ஆகியவற்றில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வர்ணனைகளுடன் போட்டிகளை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கலாம். அதேநேரத்தில், இந்தப் போட்டியின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கை JIOHotstar செயலி அல்லது இணையதளத்தில் காணலாம்.