Womens World Cup 2025: அரையிறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு தவறியதா..? சமன்பாடு என்ன சொல்கிறது..?
India Women vs Australia Women: தென்னாப்பிரிக்க மகளிர் அணியிடம் தோல்வியடைந்த பிறகு, இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணியிடமும் தோல்வியடைந்துள்ளது. 2025 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியாவின் பாதை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2025 மகளிர் உலகக் கோப்பையில் (Womens Cricket World Cup) ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி (India Womens Cricket Team) தொடர்ச்சியாக 2வது போட்டியில் தோல்வியடைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடமும் இந்திய மகளிர் அணி தோல்வியை சந்தித்தது. 2025 அக்டோபர் 12ம் தேதியான நேற்று ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 330 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 80 ரன்களும், பிரதிகா ராவல் 75 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலியின் சதம் (142) இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்திய அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, ஆஸ்திரேலிய அணிக்காக பந்துவீசி இந்திய அணியின் 3 முக்கிய விக்கெட்கலை எடுத்து எலிஸ் பெர்ரி முக்கிய பங்கு வகித்தார். இந்தநிலையில், தொடர்ச்சியான 2 தோல்விகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி எப்படி அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
331 ரன்களை விட்டுகொடுத்த இந்திய மகளிர் அணி:
2025 மகளிர் உலகக் கோப்பையை இலங்கைக்கு எதிரான வெற்றியுடன் இந்தியா தொடங்கியது. பின்னர் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது. இருப்பினும், 3வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவின் வெற்றிப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 251 ரன்களைப் பாதுகாக்கத் தவறிய, இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்தியா 330 ரன்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. பெண்கள் ஒருநாள் போட்டிகளில் இதுவே அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸிங் ஆகும்.




ALSO READ: இந்திய அணியின் தோல்வி.. புள்ளி அட்டவணையில் நிலைமை என்ன?
புள்ளிகள் அட்டவணை:
2025 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேற, வெற்றி தோல்வி மட்டுமல்ல, நிகர ரன் ரேட்டும் முக்கியமானதாக இருக்கும். ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பிறகு, இந்திய அணி 2 புள்ளிகளை இழந்தது மட்டுமல்லாமல், நிகர ரன் ரேட் அடிப்படையிலும் பின்னடைவை சந்தித்தது. தற்போது, 4 போட்டிகளுக்குப் பிறகு இந்தியா 4 புள்ளிகளுடன் +0.682 நிகர ரன் ரேட்டை பெற்று 3வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 புள்ளிகள் மற்றும் +1.353 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 3 போட்டிகளுக்குப் பிறகு 6 புள்ளிகள் மற்றும் +1.864 நிகர ரன் ரேட்டுடன் இங்கிலாந்து 2வது இடத்தில் உள்ளது.
இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது..?
Australia win the match by 3 wickets.#TeamIndia fought spiritedly and will look to bounce back in the next match.
Scorecard ▶ https://t.co/VP5FlL2S6Y#WomenInBlue | #CWC25 | #INDvAUS pic.twitter.com/dc473c4dDW
— BCCI Women (@BCCIWomen) October 12, 2025
இந்திய மகளிர் அணி தற்போது அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தாலும், அங்கு செல்வதற்கான பாதை எளிதானது அல்ல. குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் இந்திய மகளிர் அணிக்கு இன்னும் 3 போட்டிகளில் விளையாட உள்ளது. அடுத்த போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி இந்தூரில் இங்கிலாந்துக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து 2025 அக்டோபர் 23ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும் மோத உள்ளது. இரண்டும் வலுவான அணிகள் என்பதால் இந்திய மகளிர் அணிக்கு கடுமையான போட்டியாக அமையும். இந்தியாவின் இறுதி குரூப் ஸ்டேஜ் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 26ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும்.
ALSO READ: கடைசி வரை போராட்டம்.. ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி!
இப்போது இந்தியா எப்படி தகுதி பெற முடியும்?
இந்திய அணி தனது அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி இடத்தைப் பிடிப்பதன் மூலம் 10 புள்ளிகளை எட்ட முடியும். இருப்பினும், இந்திய அணி 2 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளை எட்டினால், நிகர ரன் ரேட் மிகவும் முக்கியமானதாகிவிடும். இருப்பினும், இந்திய அணி அடுத்த 3 போட்டிகளில் இரண்டில் தோற்றால், அரையிறுதிக்கான அதன் பாதை மிகவும் கடினமாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், அது மற்ற அணிகளின் வெற்றி மற்றும் தோல்விகளைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கும்.