WTC 2027-29: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிகரிக்கும் அணிகள்.. ஐசிசி முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
World Test Championship 2027: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் (3 சொந்த மண்ணிலும், 3 வெளிநாட்டிலும்) விளையாடும்.
ஐசிசி விரைவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் வடிவத்தை மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் சுழற்சியில் இந்திய அணி (Indian Cricket Team) உள்பட மொத்தம் 9 அணிகள் மட்டுமே பங்கேற்கு விளையாடி வந்தன. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துவது குறித்து ஐசிசி (ICC) பரிசீலித்து வருகிறது. இதன்மூலம், உலக கிரிக்கெட்டில் கிரிக்கெட்டின் தனித்துவமான இடத்தை நிலைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு செயல்திட்டமும் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ALSO READ: ஓய்வு முடிவை திரும்ப பெறும் ரோஹித், கோலி..? சமூக வலைதளங்களில் பரவும் தகவல்!
3 புதிய அணிகள் பங்கேற்க வாய்ப்பு:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் (3 சொந்த மண்ணிலும், 3 வெளிநாட்டிலும்) விளையாடும். ஊடக அறிக்கைகளின்படி, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெறலாம்.




ஐசிசி தனது 2026ம் ஆண்டின் முதல் காலாண்டுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டிருந்தது . இந்தக் கூட்டம் கத்தார் நாட்டின் தோஹாவில் கடந்த 026 மார்ச் 25 முதல் 27 வரை நடைபெறவிருந்தது. ஆனால், மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் சூழ்நிலை காரணமாக திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிகாரிகள் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் கூட்டத்தை நடத்தினர். ஆனால் இதுவரை எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
ALSO READ: இருநாட்டு தொடரை நடத்துங்க.. பிசிசிஐக்கு கடிதம் எழுதிய வங்கதேசம்..!
2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான திட்டம்
2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கு கிரிக்கெட்டை மீண்டும் கொண்டு வருவதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தீவிரமாக உள்ளது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகளில் தலா 6 அணிகள் மட்டுமே பங்கேற்கும். ஆசியா, பசிபிக், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் சிறந்த அணிகள் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறும் வகையில் தகுதிச் செயல்முறை அமையக்கூடும். போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, நேரடியாகப் பங்கேற்கும். அதேநேரத்தில், 6வது மற்றும் இறுதி இடம் குறித்து ஐசிசி இன்னும் முடிவெடுக்கவில்லை. 6வது அணிக்காக உலகத் தகுதிச் சுற்றுப் போட்டி நடத்தப்படலாம் என யூகங்கள் நிலவுகின்றன. இதற்கான செயல் திட்டம் விரைவில் இறுதி செய்யப்படலாம்.