IPL 2026: ஐபிஎல் 2026ல் இதுவரை தோல்வியே இல்லை.. மோதும் RR vs RCB.. குறுக்கே வருமா மழை?
RR vs RCB: ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணிக்கு ரியான் பராக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும் தலைமை தாங்குகின்றனர். ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இதுவரை வெற்றி பெற்றுளது. ராஜஸ்தான் தனது முதல் 3 போட்டிகளிலும், பெங்களூரு தங்கள் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 16வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 10ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாட இருக்கிறது. இந்த போட்டியானது கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணிக்கு ரியான் பராக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும் தலைமை தாங்குகின்றனர். ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இதுவரை வெற்றி பெற்றுளது. ராஜஸ்தான் தனது முதல் 3 போட்டிகளிலும், பெங்களூரு தங்கள் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான போட்டி விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள்.. பும்ரா பந்துகளை புரட்டி எடுத்த சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:
பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியம் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி தங்களது அதிரடி பேட்டிங்கை தொடர்வார்கள். இன்று அதாவது 2026 ஏப்ரல் 10ம் தேதி காலை பெய்த மழையால் பிட்ச் ஈரப்பதமாக இருக்கலாம். எனவே, டாஸ் வெல்லும் அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.




மழைக்கு வாய்ப்பா..?
2026 ஏப்ரல் 10ம் தேதியான இன்று கவுகாத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆட்டம் தொடங்கும் நேரத்திற்குள் வானிலை தெளிவாகிவிடும். அக்யூவெதர் தகவலின்படி, பிற்பகல் 2-3 மணிக்குள் நகரில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின்போது தெளிவான வானிலை நிலவும் என்றும், போட்டியின்போது மழை பெய்ய 3 சதவீதம் வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை மொத்தம் 31 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 17 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதற்கிடையில், ஆர்சிபி கடந்த 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ: தந்தையின் கனவு.. பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டர்.. முகுல் சௌத்ரியின் பயணம்..!
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ராஜஸ்தான் ராயல்ஸ்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், டோனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி