AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: முதல் வெற்றியை நோக்கி குஜராத்.. ஆதிக்கம் செலுத்துமா டெல்லி? பிளேயிங் லெவன் எப்படி?

DC vs GT: அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாகக் கருதப்படுகிறது. அதன் சிறிய எல்லைக்கோடுகள் அதிக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடிக்க ஏதுவாக அமைக்கிறது. இருப்பினும், இந்த ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளன.

IPL 2026: முதல் வெற்றியை நோக்கி குஜராத்.. ஆதிக்கம் செலுத்துமா டெல்லி? பிளேயிங் லெவன் எப்படி?
சுப்மன் கில் Vs அக்சர் படேல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Apr 2026 08:00 AM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 14வது போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணியும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியும் இன்று அதாவது 2026 ஏப்ரல் 8ம் தேதி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. அக்சர் படேல் தலைமையிலான டிசி அணி, தொடர்ச்சியாக 3வது வெற்றியைப் பெறும் நோக்கில் களமிறங்குகிறது. மறுபுறம், ஜிடி அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் அடுத்த போட்டியில் மீண்டும் களமிறங்க உள்ளார். காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் சுப்மன் கில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக குமார் குஷாக்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் அதனால் அணிக்கு பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை. விறுவிறுப்பாக நடந்த அந்தப் போட்டியில் குஜராத் அணி, ராஜஸ்தானிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ALSO READ: கவுகாத்தியிலும் மழை அச்சறுத்தல்.. ரத்தாகுமா மும்பை – ராஜஸ்தான் போட்டி?

மழைக்கு வாய்ப்பா..?

அக்யூவெதர் தகவலின்படி, 2026 ஏப்ரல் 8ம் தேதியா இன்று டெல்லியில் பகல் நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், கருமேகங்கள் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் ஜெட்லி ஸ்டேடியம் எப்படி..?

அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாகக் கருதப்படுகிறது. அதன் சிறிய எல்லைக்கோடுகள் அதிக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடிக்க ஏதுவாக அமைக்கிறது. இருப்பினும், இந்த ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் 4 போட்டிகளிலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ALSO READ: மோசமான தொடக்கம்.. சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்ன?

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

டெல்லி கேபிடல்ஸ்:

கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), பாத்தும் நிசாங்கா, கருண் நாயர், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அகிப் நபி தார், லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், டி நடராஜன், முகேஷ் குமார்

இம்பாக்ட் வீரர்: சமீர் ரிஸ்வி

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா,, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்

இம்பாக்ட் வீரர்: ஜேசன் ஹோல்டர்

Follow Us