AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: ஃபிஃபா உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்காதது ஏன்? கடைசியாக தகுதி பெற்றது எப்போது?

Fifa World Cup 2026 India: இந்திய அணி 1950-ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஆனாலும், இந்திய அணியால் பங்கேற்க முடியவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் கால்பந்து விளையாடிப் பழகியிருந்ததே இதற்குக் முக்கியக் காரணமாக அமைந்தது.

FIFA World Cup 2026: ஃபிஃபா உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்காதது ஏன்? கடைசியாக தகுதி பெற்றது எப்போது?
இந்திய கால்பந்து அணிImage Source: Facebook.com/TheIndianFootballTeam
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jun 2026 18:13 PM IST

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) வருகின்ற 2026 ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 19 வரை (இந்திய நேரப்படி 2026 ஜூன் 12 முதல் ஜூலை 20 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய போட்டியானது 3 நாடுகளில் உள்ள 16 நகரங்களில் மொத்தம் 104 போட்டிகளாக நடத்தப்படவுள்ளது. இதுவே ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் மிக நீண்ட ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியாகும். கடந்த ஃபிஃபா உலகக் கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி, 48 அணிகள் தலா 4 அணிகளை கொண்ட 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், 48 அணிகள் பங்கேற்றாலும் இந்திய அணி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடாதது ஏன்..? கடைசியாக எப்போது இந்தியா ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: விரைவில் ஃபிஃபா உலகக் கோப்பை.. வீரர்களின் ஒழுக்கமே முக்கியம்.. புதிய விதிகள் அதிரடியாக அறிமுகம்!

சமீபத்திய தகவலின்படி, இந்திய ஆண்கள் கால்பந்து அணி ஃபிஃபா உலகத் தரவரிசையில் 136-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியான மோசமான ஆட்டத்திறன் மற்றும் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகள் இதற்கு காரணம். இந்திய அணி கடைசியாக கடந்த 1996ம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 94வது இடத்தை பிடித்தது. இதன் அடிப்படையில், இந்திய அணி தகுதிச்சுற்று போட்டிகளில் தோல்வி உள்ளிட்ட காரணங்களால் 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் இடம்பெறவில்லை.

ஃபிஃபா உலகக் கோப்பையில் இந்திய அணி கடைசியாக தகுதி பெற்றது எப்போது?

இந்திய அணி 1950-ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஆனாலும், இந்திய அணியால் பங்கேற்க முடியவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் கால்பந்து விளையாடிப் பழகியிருந்ததே இதற்குக் முக்கியக் காரணமாக அமைந்தது. இது இந்திய வீரர்களுக்கு ஒரு பிரச்சனையாகவும் ஆனது. உலகக் கோப்பையில் வீரர்கள் காலணிகள் அணிந்து விளையாட வேண்டும் என்று ஃபிஃபா (FIFA) விதிகள் வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்திய வீரர்கள் காலணிகளுடன் கால்பந்து விளையாடிப் பழக்கமில்லாததால், பங்கேற்க மறுத்துவிட்டனர்.

பணமும் ஒரு காரணம்..

1950ம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை பிரேசில் நாட்டில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட இருந்ததால், இந்திய கால்பந்து சங்கமும் அரசாங்கமும் செலவுகளை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஃபிஃபா இந்தியாவின் பயணச் செலவுகளை ஏற்கத் தயாராக இருந்தபோதிலும், இந்திய அணியால் அந்தப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதுமட்டுமின்றி, இந்திய அணிக்குள் ஏற்பட்ட வீரர் தேர்வு குறித்த சர்ச்சைகள் மற்றும் போதிய பயிற்சி இல்லாததும் பங்கேற்காததற்கான காரணங்களாக அமைந்தன.

ALSO READ: பிரமாண்டமாக தொடங்கும் ஃபிஃபா உலகக் கோப்பை.. தொடக்க விழா எப்போது தெரியுமா?

1950 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி இந்த மாபெரும் போட்டிக்கு ஒருபோதும் தகுதி பெற்றதில்லை. மேலும், ஃபிஃபா தரவரிசையிலும் இந்திய கால்பந்து அணி பின்தங்கிய நிலையில் உள்ளது.

Follow Us